பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284

&డ్ల

(அ - சொ) மெய்உரை - குருவினிடம் பெறும் மகா வாக்கிய உபதேசங்கள். விண்ணவன் - தேவன். *

(விளக்கம்) யோகம் செய்வதற்கு விருப்பம் வேண்டும் என்பது ஈண்டு வற்புறுத்தப்படுகிறது. மெய்த்தவம் என்பது தனக்கு வரும் துன்பத்தைப் பொறுத்தலும், எந்த உயிர்கட்கும் துன்பம் செய்யாத நிலையும் ஆகும். விண்ணவர் ஆகலாம் என்பது பூலோகத்தில் மேலானவர்களாய் இருக்கலாம் எனல்.

யோகியர்கட்கு இறைவன் செய்யும் அருள்

247. பேணில் பிறவா உலகருள் செய்திடும்

காணில் தனது கலவியுளேகிற்கும் நாணில் நரக நெறிக்கே வழிசெய்யும் ஊனில் சுடும்அங்கி உத்தமன் தானே.

(இ - ள்) உடம்பில் சூடு எங்கும் தங்கி இருப்பதுபோல் உயிர்கள் தோறும் தங்கி இருக்கும் இ ைற வ ன், யோகத்தைப் போற்றிச் செய்வார்க்கு மீண்டும் பிறவி எடுக்காத நிலையில் மோட்ச வீட்டைக் கொடுப்பன். சிவ சொரூபத்தைக் கண்டால் அவளுேடு கலத்தல் ஆகிய பேரினப நிலையினைத் தருவான். யோக நெறியை மேற் கொள்ள வெட்க முற்ருல், நரக வழியில் கொண்டு போய்ச் சேர்ப்பான். - - -

(அ சொ) ஊன் - உடம்பு. அங்கி - நெருப்பு. உத்தமன் - இறைவன். பேணி - இடைவிடாது போற்றி. பிறவா உலகு - மோட்ச உலகம். கலவி - தன்னுடன் கலந்திருக்கும் இன்பம். நாணில் - கூசினல். நெறி - வழி.

(விளக்கம்) ஊன் என்னும் சொல்வின் பொருள் தசை என்பது: ஈண்டுத் தசை பொருந்திய உடம்பை உணர்த்தியது. இங்கு இறைவனை எண்ணக் காணக் கூசுதல் ஆகாது என்பது விளக்கப்பட்டது.