பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

289

289.

(இ- ள்) செய்வதற்குச் சுலபமான முறையாகிய திரு விளக்குகளைத் திருக்கோயில்களில் அமைத்தல்,பூக்கொய்து இறைவனே வழிபடல், அன்புடன் பசுச் சாணத்தால்

திருக்கோயில் மெழுகுதல், திருக்கோயிலில் உள்ள குப்பைக் கூளங்களைக் கூட்டித் தூய்மை செய்தல், இறைவன் திரு

முன் நின்று நாம் வாழ அவனே வாழ்த்துதல், திருக்கோ யில் மணிகளைப் பற்றி ஒலித்தல், இறைவனுக்குக்குரிய திருமுழுக்குப் பொருள்கள் (அபிஷேகப் பொருள்கள்) முதலானவற்றைச் செய்வது தாசமார்க்கம் ஆகும்.

(அ- சொ) எளி - எளிதான அளிதின் - அன்புடன். அது. ப்பைக் கூளங்களே. தூர்த்தல் - எடுத்து வெளியே குவித்தல். பளி - கோவில். மஞ்சனம் - அபிஷேகம். ஆதி - முதலியன. தளி - கோயில்.

(விளக்கம்) திருக்கோயில்களுக்கு விளக்கு ஏற்றிவைத்தல் எளிதான செயல் ஆதலின், எளி அனல் தீபம் இடல் எனப் பட்டது. எதைச் செய்யினும் அன்புடன் செய்ய வேண்டியது முறை ஆதலின், அளிதின் மெழுகல் என்றனர். பள்ளி: என்னும் சொல்லுக்குக் கோவில் என்பது பொருள். இங்குப் பாட்டு அமைப்புக் காரணமாக 'பளி' என நின்றது. தாசன் என்னும் சொல் அடியவன் என்னும் பொருளையுடையது. இறைவனம் எசமானனுக்கு அடியனுக இருந்து வழிபட்டு முத்தி நிலை அடையலாம் இதுவும் இறைவனை அடைய வழி: ஆகவே தாசமார்க்கம் என்றனர்.

இறைவியைப் பூசிக்க எய்தும் பேறு

254. பிறப்பை அறுக்கும் பெருந்தவம் நல்கும்

மறப்பை அறுக்கும் வழிபட வைக்கும் குறப்பெண் குவிமுலை கோமள வல்லி சிறப்பொடு பூசனை செய்யகின் ருர்க்கே.

த. -19