பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

295

盛绫

எழுத்து. அதுவே, ஒம் என்னும் பிரணவம், படைத்தல்" காத்தல், மறைத்தல், அருளல் ஆகியவை ஐந்து தொழில்கள்,

பற்று விட்டோர் நிலை

262. ஒடுங்கி நிலைபெற்ற உத்தமர் உள்ளம் கடுங்குவதில்லை நமனும்அங்கில்லே இடும்பையும் இல்ல்ை இராப்பகல் இல்ல படும்பயன் இல்லை பற்றுவிட் டோர்க்கே.

(இ - ள்) ஐம்புலன்களை ஒடுக்கி நிலைபெற்ற உத்தமர் மனம் எந்த விதமான விபத்து ஏற்பட்ட காலத்திலும் நடுக்கம் அடையாது. உலகப்பற்றை விட்ட அவர்கட்கு இயமபாதை கிடையாது; துன்பமும் வராது. இரவையும் பகலையும் அவர்கள் சமமாகவே எண்ணுவர். அவர்கட்கு வரக்கூடிய பயனும் இல்லை.

(அ . சொ) நமன் - இயமன். இடும்பை துன்ப ம். படும் வரும். பற்று - ஆசை.

(விளக்கம்) ஐம்புலன்கள் உடம்பு, வாய், கண், மூக்கு, காது என்பன. இவை மக்களைத் தம் வழியே இழுத்துச் சென்று உலக ஆசை வலையில் சிக்க வைக்கும். ஆகவே, இவற்றின் வழி செல்லாது ஒடுங்கி வாழ்பவரே பற்று விட்டவர் ஆவார். நமன் அங்கு இல்லை என்பது, ஆசை அருதவர்கள் மரண காலத்தில் படும் துன்பம் ஆசை அற்றவர்க்கு இல்லை என்பதாம். எல்லாம் துறந்த துறவி கட்கு உலகபந்தத்தில் பற்று இல்லாத காரணத்தினால், இரவையும் பகலையும் ஒருபடித்தாகவே எண்ணி வாழ்வர். ஆதலின் இரவு பகல் இல்லே எனப்பட்டது. துறவிகள், எதையும் விரும்பாதவர் ஆதலின், அவர்கட்கு எந்தப் பயனும் இல்லை என்பார், படுபயன் இல்லை என்று ர்,