பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

302

302

மூலட்டானத்திலிருக்கும் இலிங்கம். சூக்குமம் - நுண் வடி வாகிய லிங்கம். பாய - பரந்த, பத்திரம் - ரிஷபம். அரன்நிலை - சிவபெருமான் கோவில். -

(விளக்கம், கோயில் அமைப்பே சிவலிங்க அமைப்பாகும் கோபுரமும் இலிங்கமே. அது தூயலிங்கம் எனப்படும். பலி பீடம் ஆணவ, கன்ம, மாயையைக் குறிக்கும் மலஇருப்பாகும். ரிஷபம் ஆன்ம்ர் ஆகும்.

அருள் பண்பில் 272. அருள்கண் இலாதார்க் கரும்பொருள் தோன்ற அருள்கண் உளோர்க்கெதிர் தோன்றும் அர்ன்ே இருள்கண்ணி ஞேர்க்கங் கிரவியும் தோன்ரு தெருள்கண்ணி னுேர்க்கெங்கும் சீர்ஒளி ஆமே. (இ - ள்) அருளாகிய கண் இல்லாதவர்கட்கு அரிய பொருள்கள் தென்படமாட்டா. அருள்கண் உள்ளவர் கட்கு இறைவன் எதிரே தோன்றுவன். பேர் ஒளியுடைய சூரியனும் இருள்கண் உடையவர்கட்குத் தோன்ற மாட் டான். தெளிந்த அறிவுக்கண் உடையவர்கட்கு எங்கும் சீரிய ஒளி விளங்கும்.

(அ - சொ) அரன் - ஈசன். இரவி - சூரியன். தெருள் - தெளிவுடைய. சீர் சிறப்பு.

(விளக்கம்) இறைவன் அருள் உடிை நெஞ்சத்தவர் முன் நிற்பன் என்பது இங்குக் குறிப்பிடப்பட்டுள்ளது. இருள் கண் ஈண்டு அஞ்ஞானக்கண். தெருட்கண் என்பது ஞானக் கண். எங்கும் ஒளியாமே என்பது எல்லாம் ஐயம் திரிபு இல்லாமல் விளங்கும் என்பதாம். ---

உள்ளத்திலேயே பூசை உண்டு 273. உள்ளம் பெருங்கோயில் ஊன்உடம் பாலயம்

வள்ளல் பிரானுர்க்கு வாய்கோ புரவாசல் தெள்ளத் தெளிந்தோர்க்குச் சீவன் சிவலிங்கம் கள்ளப் புலன் ஐந்தும் காள மணிவிளக்கே.