பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

303

(இ - ள்) நமது மனமே பெரிய கோவில். அக் கோவிலின் மூலட்டானம் தசையால் ஆன உடம்பு. அன்பர் களின் குறிப்பறிந்து கொடுத்தருளும் இறைவனுக்கு வாயே கோபுர வாசல் ஆகும். நன்கு அறிந்த ஞானிகட்கு 'ஆன்மாவே சிவலிங்கமாகும். மனத்தைத் திருட்டு வழியில் இழுத்துச் செல்லும் ஐந்து புலன்களும் அழகிய விளக் காகும். 、

(அ - சொ) உள்ளம் மனம். ஊன் - தசை. ஆலயம் - மூலத்தானம், வள்ளல் பிரான் - இறைவன். தெள்ளி - தெளிவாக. சீவன் - ஆன்மா. புலன் ஐந்து - உடம்பு, வாய், கண், மூக்கு, காது. காளம் - அழகு.

(விளக்கம்) ஆலய அமைப்பு, ஆண்டவன் இருப்பு யாவும் நம் உடம்பிலேயே உள என்பது இம் மந்திரக் கருத்து. இறைவன் ஆன்மாக்களின் பக்குவம் அறிந்து தேவைகளைக் கொடுத்து உதவுவதால் வள்ளல் எனப்பட்டான். களே என்னும் சொல்லுக்கு அழகு என்பது பொருள். அச்சொல் காள என ஈண்டுத் திரிந்தது.

இறைவன் திருவருளை ரோலும் மலராலும் பெறலாம் 274. புண்ணியம் செய்வார்க்குப் பூவுண்டு நீருண்டு

அண்ணல் அதுகண் டருள்புரி பாகிற்கும் எண்ணிலி பாவிகள் எம்இறை ஈசன நண்ணறி யாமல் நழுவு கின்ருரே. (இ - ள்) மலரும் நீரும் புண்ணியர்க்கே கைவரப் பெறும். இவற்றைக் கொண்டு இறைவனைப் பூசித்தால் அவன் அருள் புரிவான். இந்த எளிய முறையை மேற் கொள்ளாமல் கணக்கற்ற பாவிகள் இறைவனை அணுகுதல் அறியாமல் கழன்று போகின்ருர்களே. என்னே அவர்கள் அறியாமை! -

(அ - சொ) அண்ணல் - பெருமையில் சிறந்த இறைவன். அது நீர் பூவாகிய அதனை புரியா - புரிந்து நண் அணுக