பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

346

苹盛翁

குறிக்கும் என்பதாம் நடராசர் திருவடியில் ஒரு பூதம் படுத்திருப்பதைக் காணலாம். அப்பூதமே முயலகன் என்பது: அஃது ஈண்டு ஆணவமலக் குறியாகக் குறிக்கப்பட்டுள்ளது.

நடராசரே ஐந்து தொழிற்கும் காரணர் 337. அரன்துடி தோற்றம் அமைத்தல் திதியாம்

அரன்.அங்கி தன்னில் அறையில்சங் காரம் அரன்.உற் றணப்பில் அமரும் திரோதாயி அரன்அடி என்றும் அனுக்கிர கம்மே. (இ - ள்) சிவபெருமானது உடுக்கை படைத்தலையும், அமைத்த கை காத்தலையும், ஏந்தியுள்ள மழு அழித்தலே யும், ஊன்றியுள்ள பாதம் மறைத்தலையும், தூக்கிய திருவடி அருளுதலையும் உணர்த்தும்.

(அ - சொ) அரன் - சிவபெருமான், துடி - உடுக்கை. தோற்றம் - படைத்தல். அமைத்தல் - அபுயம் காட்டும் கை. திதி - காத்தல். அங்கி - மழு. அறையில் - சொன்னல். சங்காரம் - அழித்தல். உற்று - ஊன்றி. அணைப்பில் - அழுத்திய திருவடியில். திரோதம் - மறைத்தல். அமரும் . பொருந்தி இருக்கும். அடி - குஞ்சிதபாதம்; தூக்கிய திருவடி. அனுக் கிரகம் - அருளுதல்,

(விளக்கம்) படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் இவ்வைந்தும் இறைவன் உயிர்களின் பொருட்டுச் செய்யும் ஐந்து தொழில்கள் ஆகும். இவற்றைப் பஞ்ச கிருத்தியம் என்பர். ஐந்தொழிற்கும் கருத்தர் நடராசரே என்பது இம்மந்திரக் கருத்து.

அகக் கண்ணுல் பார்ப்பதே ஆனந்தம் 333. முகத்தில் கண்கொண்டு பார்க்கின்ற மூடர்காள்

அகத்தில் கண்கொண்டு காண்பதே ஆநந்தம்

மகட்குத் தாய்தன் மணுளனே டாடிய சுகத்தைச் சொல்என்றல் சொல்லுமா றெங்கனே.