பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

350

350

என்று சொல்லப் படுகிறது. இதில் முதல் மாதம் என்னிலையில் இருக்கும் என்பது சொல்லப் படாததை அறியவும். அம் மாதத்தில் பிண்டமாக மட்டும் இருக்கும்போலும்.

மூவகை நாடிகளை அறியும் விதம்

342. குறியாம் வலக்கரம் குவிந்த பெருவிரல்

மறியா அதன்கீழ் வைத்திடும் மூவிரல் பிறிவாய் மேல்ஏறிப் பிலத்தது வாதம்.ஆம் அறிவாய் நடுவிரல் அமர்ந்தது பித்தமே.

(இ - ள்) வலக்கரத்தில் குவிந்த பெரு விரலைக் கீழே வைத்து, ஆள் காட்டி விரல், நடுவிரல், மோதிர விரல் மூன்றையும் வலக்கரத்தின் மணிக்கட்டின்மேல் வைத்துக் கவனிக்கும்போது, பலமாக மேலே செல்லும் நாடியை வாத நாடியாகவும், நடுவிரலில் செல்வதைப் பித்த நாடியாகவும் அறிந்து கொள்க.

(அ - சொ) பிலத்தது - பலத்தோடு அடித்துக்கொள்வது.

(விளக்கம்) வலக்கரம் என்பது ஆண்களது வலக் கரத்தை என்க. நாடி பார்க்கும்போது மணிக்கட்டில் விரல்களை வைத்துத் தான் பார்க்க வேண்டும். நாடியைப் பார்க்கும்போது சித்திரை வைகாசி மாதங்களில் சூரியோதயத்தில் பார்க்கவேண்டும். ஆனி, ஆடி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் மத்தியானத்தில் பார்க்க வேண்டும். மார்கழி, தை, மாசி மாதங்களில் மாலையில் பார்க்க வேண்டும். ஆவணி, புரட்டாசி, பங்குனி மாதங்களில் பாதி இரவில் பார்க்க வேண்டும். இப்படிப் பார்த்து நமக்குள்ள வாத பித்த சிலேத்துமங்களை அறிந்து கொள்ளலாம். தலையில் எண்ணெய் இருக்கும்போதும், ஈரத்தோடு இருக்கும்போதும், நல்ல உணவு உண்டபோதும், பசியாய் இருக்கும்போதும், நடக்கும்போதும், சிற்றின்ப உணர்ச்சி உண்டானபோதும் நாடி பரிசோதனை செய்தால் நாடியின் உண்மை நிலைமை அறிய முடியாது. பெண்களின் நாடியினைப் பார்க்க அவர்களின்