பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/363

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

361

361

சன்னி வரக் காரணம் 358. பதமாம் சுகசன்னி பாயும்விதம் கேளு

நிதமாக மூழ்கி நிறையவே சாப்பிட்டுக்

ள்) பக்குவமாகச் சுகசன்னி உண்டாகும் விதத் தைக் கேள். தினம் தினம் குளத்தில் குளித்து, நிறைய உண்டு, சீரணம் ஆகாத நிலையில் மாதரைப் புணர்ந்தாலும் உடம்பில் வாய்வு மிகுந்திருந்தாலும் சுகசன்னி உண்டாகும்.

(அ சொ) பாயும் - உடம்பில் பரவும். நிதமாக - தினம் தினம். அதுபோகம் - மாதர் கலப்பு. அணைந்திடில் - சேரில். குதமாக - அமிதமாக, அதமாம் - அழிவாம்.

(விளக்கம்) குளித்துவிட்டு, உண்டு, உடனே மாதர் போகம் செய்யக் கூடாது. சீரணம் ஆகாதபோது மாதர் போகம் கூடாது. உடம்பில் வாய்வு நிறைந்திருக்கும் போதும் போகம் கூடாது. போகம் செய்தால் சன்னி ரோகம் வந்தே

தீரும்.

மூலநோய் வரக் காரணம்

359. காயத்தில் மூலம் கண்டவிதம் கேளு

பாயொத்த தீபனம் பரிந்தே அடக்கினும் மாயை மயக்க மலத்தை அடக்கினும் ஒயுற்ற குண்டலிக் குள் புகும் வாயுவே. (இ - ள்) உடம்பில் மூல நோய்வரும் விதத்தைச் சொல்லுகின்றேன் கேள்: பாய்ச்சலை போன்ற அதிதீவிர மான பசியை அடக்குவதாலும், மாதர் மயக்கில் ஈடுபட்டு மலசலம் இவற்றை அடக்குவதாலும், அயர்ந்திருக்கின்ற

குண்டலிச் சக்தியுள் வாயு புகுவதாலும், மூலநோய் உண்டாகும்,