பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37

இதி

கமழ்கின்றது. தோண்டிப் பாருங்கள்" என்று கட்டளையிட: அவ்வாறே தோண் டிப் பார்க்கும்போது, திருமூலரின் திருமந்திரப் பாடல்கள் கண்டெடுக்கப்பட்டனவாக ஒரு செவிமரபு வரலாறு கேட்கப்படுகிறது. இதனை உற்று நோக்கும்போது, கி. பி. ஏழாம் நூற்ருண்டினரான திருஞான சம்பந்தருக்கு முற்பட்டவர் திருமூலர் என்பது பெறப்படு கிறது. --

கி. பி. ஏழாம் நூற்ருண்டினரான திருநாவுக்கரசர் தமக்கு முன்னிருந்த மாணிக்கவாசகர் வாழ்க்கை வரலாற்றைப் பற்றிய குறிப்புக்களில் ஒன்ருன, நரிகள் குதிரைகள் ஆனதை" "நரியைக் குதிரை செய்வானும்’ என்று குறிப்பிடுகின்றனர். ஆகவே, திருநாவுக்கரசருக்கு முன்பு மாணிக்கவாசகர் இருந் தார் என்பது தெரிகிறது. மாணிக்கவாசகர் காலத்தில் விநாயகர் வணக்கம் குறிக்கப்படவில்லை. மேலும், அவர் பாட்டில் சண்டேசுர நாயனர் குறிப்பும், கண்ணப்பர் குறிப்பும் மட்டும் காணப்படுகின்றன. ஏனைய நாயன்மார்களைப் பற்றிய குறிப்புக்கள் காணப்பட்டில. மேலும், கி. பி. ஏழாம் நூற் ருண்டிரான அப்பர், சம்பந்தர் வாழ்க்கை வரலாற்றில் பல்ல வர்களைப்பற்றிய தொடர்பு உளது. பல்லவர்களின் குறிப்பு மாணிக்கவாசகர் வாக்கில் யாண்டும் இல்லை. பல்லவர்களைப் பற்றிய செய்தியே கி. பி. நான்காம் நூற்ருண்டில் தொடங் கியது என்பது வரலாற்று உண்மை. சங்க நூற்களிலும் பல்லவர்களைப்பற்றிய குறிப்புக்கள் காணப்படவில்லை. எனவே, மாணிக்கவாசகர் கி. பி. நாலாம் நூற்ருண்டின் தொடக்கத் தில் வாழ்ந்தவர் ஆதல் வேண்டும். மாணிக்கவாசகர் காலத் தைப் பலதடை விடைகளால் அறிய அவாவுவோர் யான் எழுதியுள்ள பொய்யடிமை இல்லாத புலவர் யார்?' என்னும் நூலில் பரக்கக் காண்பாராக. கி. பி. நான்காம் நூற்ருண்டு மணிமொழியார் குறிப்பிட்ட பழம்பெரும் அடியார்களான கண்ணப்பர், சண்டேசுவரர் இ ரு வ ர் க ளு ள், திருமூலர் சண்டேசுரரை மட்டும் குறிப்பிட்டுக் கண்ணப்பரைக் குறிப் பிடாததை உற்று தோக்கும்போது, கண்ணப்பளுக்கு முற்