பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

శ్రీశ్రీ

பட்டவர் திருமூலர் என்பது பெறப்படுகிறது. அதாவது கி. பி. நான்காம் நூற்ருண்டு திருவாதவூரருக்கும் முற்பட்டவர் திருமூலர் என்பது புலப்படுகின்றது.

تي تخفية نتني

திருமூலர் சண்டேசுவரரைக் குறிப்பிட்ட திருமந்திரப் பாடல்,

உறுவ தறிதண்டி ஒண்மணல் கூட்டி அறுவகை ஆனந்தும் ஆட்டத்தன் தாதை செறுவகை செய்து சிதைப்ப முனிந்து மறுமழு வால்வெட்டி மாலேபெற் ருனே.

என்பது.

சங்க காலத்தில் புலவர்கள் பலவகை யாப்பு முறைகளைக் கையாளாமல் தாம் பாடப்புகுங் காலத்து ஒரே வகையான யாப்பையே கையாண்டனர். விருத்த பேதங்கள் அப்போது காணப்படவில்லை. அக் காலப் புலவர்களைப் போலவே திரு மூலரும் கலிப்பாவின் உறுப்புக்களில் ஒரு பிரிவினையை மேம் கொண்டு அப் பாவின் மூலம் தம் நூல் முழுமையும் பாடி முடித்துள்ளனர். அதாவது நான்கடிகளைக் கொண்டு ஒர் அடிக்கு நான்கு சீர்கள் அமைந்த பாடல்களாகும். இதனை இக் காலத்தில் கலிவிருத்தம் என்பர். ஆனல் சங்க காலத்தில் இது கலித்தாழிசையாகக் கருதப்பட்டது. இப் பெயர் கொடுத்துப் பேசி இருப்பதைக் கலித்தொகைக்கு உரை கண்ட நச்சிஞர்க்கினியர் வாக்கால் தெளியவும்.

ஆகவே, திருமூலர் சங்ககாலத்துப் போக்கினை உடை பவர் என்பதை உற்று நோக்கும்போது, சங்க காலத்துப் புலவர் என்பது தெரிய வருகிறது.

சங்க காலம் என்னும்போது மூன்று சங்க காலங்கள் பெறப்படுகின்றன. முச்சங்கங்களைப்பற்றிய குறிப்பினே இறை யனர் களவியல் உரையில் காண்கின்ருேம். அவ்வுரையில் கடைச்சங்கம் இருந்து தமிழை ஆய்ந்த காலத்தை ஆயிரத்து