பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41

#1

என்றும் கூறினர். ஆனால், திருமூலர் வந்த காரணம் சொல் கிறபோது, "குறுமுனிபால் உற்றதொரு கேண்மையினுல் உடன் சிலநாள் உறைவதற்கு நற்றமிழின் பொதியமலே நண்ணுதற்கு வழிக்கொண்டார்” என்கிருர், இக் கருத்துக்கு ஏற்ற குறிப்புத் திருமூலர் வாக்கில் இல்லை. ஆனல் வேது சிறந்த குறிப்புக் காணப்படுகிறது.

இறைவன் இவரை நில உலகில் வேத ஆகமங்களின் கருத்தைத் தமிழ் மொழியில் ஆக்கச் செய்யவே, படைத் தனளும். இக் கருத்தைத் திருமூலர் வாக்கைக் கொண்டே நன்கு நிறுவலாம்.

"என்னைகன் ருக இறைவன் படைத்தனன் தன்னகன் ருகத் தமிழ்செய்யும் ஆறே"

என்பதைக் காண்க.

ஈண்டுத் தமிழ் என்றது, தமிழால் அமைந்த வேதத்தின் கருத்தும் ஆகமத்தின் கருத்தும் ஆகும். இதனை வெளிப்பட "அரன் அடி நாள்தொறும் சிந்தை செய்து ஆகமம் செப்ப லுற்றேனே" என்றும், சீலாங்க வேதத்தைச் செப்ப வந்தேனே' என்றும் திருமூலரே கூறுவது காண்க.

இறைவன் திருமூலரை வேதாகமங்களைத்.தமிழில்விளக்கவே

வந்தவதரிக்கசெய்தார் என் பதைத் திருமூல ர் வாக்கில் இருப்பதை உய்த்து உணர்ந்துதான் சேக்கிழாருந் "தண்ணில வார் சடையார்தாம் தந்த ஆகமப்பொருளை மண்ணின் மிசைத் திருமுலர் வாக்கினுல் தமிழ் வகுப்ப' என்று உணர்த்தினர்.

ஈண்டு ஒரு சிலருக்குத் திருமுலர் கூறியவை ஆகமத்தின் சாரமா? அன்றி வேதத்தின் சாரமா? என்னும் ஐயம் எழக் கூடும்.

திருமுலர் திருமந்திர வாக்குகளை நன்கு அலசிப் பார்க்கும் போது, வேதசாரம் பொதுவாகவும், ஆகமச்சாரம் மிகுதி யாகவும் காணப்படும். தம் திருவாயால் ஆகமத்தைப் பற்றியே மிகுதியாகப் பேசுகிருர்,