பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

6. திருமூலர் கில உலகில் பிறக்கக் காரணம்

உலகப் பெரியவர்களின் தோற்ற த் தி ற்கு ப் பல காரணங்கள் உண்டு. இதனைச் சேக்கிழார் திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் போன்றர் தோற்றத்திற் குரிய காரணங்களில் நன்கு விளக்கியுள்ளார்.

தொண்டர்மனம் களிசிறப்பத் தூயதிரு நீற்றுநெறி எண்திசையும் தனிநடப்ப ஏழுலகும் குளிர்துங்க அண்டர்குலம் அதிசயிப்ப அந்தணர்ஆ குதிபெருக வண்டமிழசெய் தவம்கிரம்ப மாதவத்தோர் செயல்வாய்ப்ப திசைஅனைத்தின் பெருமைஎலாம் தென்திசையே வென்றேற மிசை உலகும் பிறஉலகும் மேதினியே தனிவெல்ல - அசைவில்செழும் தமிழ்வழக்கே அயல்வழக்கின்

துறைவெல்ல இசைமுழுதும் மெய்அறிவும் இடங்கொள்ளும் நிலைபெருக அவம்பெருக்கும் புல்லறிவின் அமண்முதலாம் பரசமயம் பவம்பெருக்கும் புரைநெறிகள் பாழ்படகல் ஊழிதொறும் தவம்பெருக்கும் சண்பையிலேதாவில் சரா சரங்கள்ளலாம் சிவம்பெருக்கும் பிள்ளையார் திருஅவதா ரம்செய்தார். என்று திருஞான சம்பந்தரின் தோற்றத்திற்குரிய காரணத் தைக் காட்டினர்.

திருநாவுக்கரசரின் பிறப்பிற்குரிய காரணத்தைத் 'திருத் தொண்டின் நெறிவாழ வருஞானத் தவமுனிவர் வாகீசர்’ என்றும் சுந்தரரின் தோற்றத்திற்குரிய காரணத்தை,

'மாத வம்செய்த தென்திசை வாழ்ந்திடத்

தீதி லாத்திருத் தொண்டத் தொகைதரப் போதுவார்”