பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

9. திருமந்திரச் சிறப்பு

திருமந்திரம் வேதத்தின் பிரிவு என்பது நம்பி ஆண்டார் நம்பிகளின் கருத்து. அதனை அவர் 'முழுத் தமிழின்படி மன்னு வேதத்தின் சொல்படியே பரவிட்டு' என்று மொழிந்துள்ளார். சேக்கிழார், இதனை ஆகமத்தின் பொருள் என்பர். "தண்ணில வார் சடையார் தாம் தந்த ஆகமப் பொருளை மண்ணின் மிசைத் திருமூலர் வாக்கினல் தமிழ் வகுப்ப' என்று கூறி இருப்பதைக் காண்க. இத்துடன் இன்றி இத்திருமந்திரங்கள் ஞானம், யோகம், கிரியை, சரியை இவற்றை உணர்த்துவன என்பதை, "ஞான முதல் நான்கும் மலர் திருமந்திரமாலை: என்று நவின்றுள்ளது சித்தாந்த தரிசனம் என்னும் நூல். பிறப்பாகிய கடலைக் கடத்தற்குத் திருமூலர் திருமந்திரம் தெப்பமாக உதவவல்லது என்ற கருத்தில் 'திருமூலர் மாலை எனும் தெப்பத்தைப் பற்றிக்கருவேலையைக்கடப்போம் காண்” என்று கூறுகிறது. திருமுறை கண்ட புராணம் இதனை, சிவ போகம் மிகுமந்திரம்' என்று சிறப்பிக்கிறது. அதாவது சிவ பெருமான்மீது இன்பத்தை மிகுவிக்கும் மந்திரமாம். ஒளவையார் ஒத்த கருத்துடைய நூல்கள் இன்னின்ன என்று கூறவந்த இடத்துத் திருமூலர் திருமந்திரத்தையும் தேர்ந்து குறிப்பிட்டுள்ளனர். .

அப்பாடல்,

தேவர் குறளும் திருநான் மறைமுடிவும் மூவர் தமிழும் முனிமொழியும்-கோவை

திருவா சகமும் திருமூலர் சொல்லும் ஒருவா சகம்என் றுணர்.

என்பது, தனிப்பாடல் ஒன்று திருமந்திரதின் சிறப்பை,