பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

58

புலால் மறுத்தல் முதலான தலைப்புக்களைக் கொண்டு உணர லாம். இத் தந்திரத்தில் இருபத்துநான்கு தலைப்புக்கள் உள்ளன. -

இரண்டாம் தந்திரத்தில் இருபத்தைந்து தலைப்புக்கள் உள. இதில் சிற்சில புராண வரலாற்றுக் குறிப்புக்களும், கரு எப்படி உண்டாகிறது என்பதும், இறைவனது படைத்தல் முதலான ஐவகைத் தொழில்கள் இன்ன என்பனவும் பேசப் பட்டுள்ளன. .

மூன்றும் தந்திரத்தில் இருபத்தொரு தலைப்புக்கள் உள்ளன. இதில் அட்டமாசித்தி, அட்டாங்கயோகம், பிராணு யாமம், யோகம், ஆயுள் பரீட்சை முதலான பல்வகைச் செய்தி கள் அடங்கியுள்ளன.

நான்காம் தந்திரத்தில் பதின்மூன்று தலைப்புக்கள் உள்ளன. இதில் பல சக்கர அமைப்புக்களும், வயிரவி மந்திரம் போன்ற பல மத்திரங்களுக்கான மார்க்கமும் குறிக்கப்பட்டுள்

嫁”桨。

ஐந்தாம் தந்திரம் இருபது தலைப்புக்களைக் கொண்டது. இதில் சரியை, கிரியை, யோகம், ஞானம் பற்றியும், சத்புத்திர மார்க்கம், தாச மார்க்கம், சகமார்க்கம், ஞானமார்க்கம் பற்றி யும், சாலோக சாமீப சாருப சாயுச்சிய நிலைகளைப் பற்றியும், சைவத்தின் வகைகள் பற்றியும் கூறப்பட்டுள்ளன.

ஆளும் தந்திரத்தில் சீடனது இலக்கணம், சிவவேடம், அவவேடம், தவவேடம், திருநீற்று மாண்பு, துறவு, பக்குவன் முதலான பல செய்திகள் குறிக்கப்பட்டுள்ளன. இதில் பதினன்கு தலைப்புக்கள் உள.

ஏழாம் தந்திரத்தில் முப்பத்தெட்டுத் தலைப்புக்கள் உள்ளன. இதில் அடியார் பெருமை, சற்குருவாக அமையா தவர், லிங்க வகைகள், பசுவின் (ஆன்மாவின்) இலக்கணம், அடியார்கட்கு அன்னம் இடவின் சிறப்பு, சமாதி அமைய வேண்டிய முறை, குருபூசை விதி முதலான பல குறிப்புக்கள் பேசப்பட்டுள்ளன.