பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65

岔荔

என்பது திருக்கயிலாயம் போற்றித் திருத்தாண்டகம். திருக் கயிலாயப் போற்றித் திருத்தாண்டகப் பாடல்கள் முப்பது உள்ளன. -

திருவாதவூரர், போற்றித் திருவகவல் என்றும் ஒரு ஒரு பாடலேயே பாடியுள்ளனர். அப்போற்றித் திருவகவல்,

தாயே ஆகி வளர்த்தனை போற்றி கைதர வல்ல கடவுள் போற்றி ஆடக மதுரை அரசே போற்றி கூடலில் இலங்கும் குருமணி போற்றி தென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி இன்றெனக் காரமுதம் ஆளுய் போற்றி மூவா கான்மறை முதல்வா போற்றி சேவார் வெல்கொடிச் சிவனே போற்றி, என்று நூற்று முப்பத்து மூன்று அடிகள் போற்றி போற்றி என்று முடியும் அடிகளைக் கொண்டுள்ளது. சிவபுராணப் பகுதியில்,

ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி தேசன் அடிபோற்றி சிவன்சே அடிபோற்றி நேயத்தே கின்ற கிமலன் அடிபோற்றி மாயப் பிறப்பறுக்கும் மன்னன் அடிபோற்றி சீரார் பெருக்துறைகம் தேவன்அடிபோற்றி ஆராத இன்பம் அருளும் மலை போற்றி. என்றும் பரவிப் போற்றி வணக்கம் செய்துள்ளார். திருவண்டப் பகுதியிலும்

இன்றெனக் கெளிவந் திருக்தனன் போற்றி அளிதரும் ஆக்கை செய்தோன் போற்றி ஊற்றிருக் துள்ளம் களிப்போன் போற்றி, என்றும் போற்றிப் பாடியுள்ளனர்.

豆・一5