பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73

73

"ஆறுவ தறிதண்டி ஒண்மணற் கூட்டி

அறுவகை ஆன்ஜந்தும் ஆட்டத்தன் தாதை

செறுவகை செய்து சிதைப்ப முனிந்து

மறுமழு வால்வெட்டி மாலேபெற் ருனே.”

என்று திருமூலர் வாக்கைக் கொண்டு அறியலாம், இவ்விரு காரணங்களால் கி. பி. நான்காம் நூற்ருண்டினரான மாணிக்க வாசகர் காலத்திற்கு முற்பட்டவர் திருமூலர் என்று கூறலாம்.

திருமூலர் தம் கருத்தை வெளியிட ஒரே வகையான யாப்பு முறையினைப் பின்பற்றியுள்ளார். இம்முறை கடைச் சங்கப் புலவர்களின்பால் அமைந்த முறையாகும். இதனை அக்காலத்து எழுந்த நூல்களைக் கண்டு தெளியலாம். அம்முறைக்கு இணங்கத் திருமூலர் கலிப்பாவின் ஒரு பிரிவினை எடுத்துக் கொண்டு அப்பிரிவின் யாப்பினையே தம் நூலில் தொடக்க முதல், இறுதிவரையில் கையாண்டுள்ளார். இது நான்கடியும் ஒர் அடிக்கு நான்கு சீரும் பெற்றுவரக் கூடிய பாட்டாகும். இப்பொருத்தத்தைத் திருமந்திரத்தில் காணலாம். ஆகவே திருமூலர் சங்க காலத்தை ஒட்டி வாழ்ந்தவர் என ஒருவாறு கூறலாம். எனவே, திருமூலரும் திருவள்ளுவரும் கடைச் சங்கக் காலத்துப் புலவர் ஆவர் என்பதை நிலைநாட்டலாம்.

ஆனால், ஈண்டொரு கருத்தை வெளியிடாமல் மேலே செல்லுதற்கில்லை. அதாவது, திருமூலர் பல்லாண்டுகள் வாழ்ந்தனர் என்பது. இத்துடன் மற்றுமொரு கருத்து, ஒர் ஆண்டுக்கு ஒரு திருமந்திரமாக மூவாயிரம் திருமந்திரங் களைப் பாடினர் என்பது. இக்காலத்தவர் இதனை ஏற்க மறுத் தாலும், திருமூலர் பற்பல ஆண்டுகள் உயிருடன் வாழ்ந்தவர் என்பதை எவரும் மறுக்க இயலாது. இவர் பல ஆண்டுகள் தாம் வாழ்ந்தமையைத் தமது பாடல்கள் வாயிலாகவே அறிவித்துள்ளார். இதனை, ஒப்பில் எழுகோடி யுகம் இருந்தேனே' என்றும், இருந்தேன் இக்காயத்தே எண்ணிலி கோடி' எனவும் பாடியுள்ளனவற்றைக் கொண்டு தெளியலாம். ஈண்டு எழுகோடி என்பதும், எண்ணிலிகோடி என்பதும்