பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

74

"பல ஆண்டுகள்” என்ற குறிப்பினைக்காட்ட வந்த உயர்வு நவிற்சியணி அமைந்த தொடராகக் கொள்வதில் இழுக்கில்லை.

இங்ங்னம் பலப்பல ஆண்டுகள் உயிருடன் நிலவ இயலுமா என்ற ஐயம் எழக்கூடும். இவ்வையத்தையும் திருமூலர் வாக்கைக் கொண்டே நீக்கிக் கொள்ளலாம். இந்த உண்மை வினை 'வளியினை வாங்கி வயத்தில் அடக்கில், பளிங்கொத்துக் காயம் பழுக்கினும் பிஞ்சாம்' எனவும், "நாட்டம் இரண்டும் நடுமூக்கில் வைத்திடில், வாட்டமும் இல்லை மனைக்கும் அழிவில்லை எனவும், ஈராறு கால் கொண்டு எழுந்த புரவியைப், பேராமல் கட்டிப் பெரிதுன வல்லீரேல், நீராயிர மும் நிலம் ஆயிரத்தாண்டும் பேராது காயம்' எனவும், "காற்றைப்பிடிக்கும் கணக்கறிவாளர்க்குக் கூற்றை உதைக்கும் குறியது வாமே" எனவும், மேலைவாயில் வெளியுறக் கண்ட பின் காலன் வார்த்தை கனவிலும் இல்லையே” எனவும் வரும் வரிகளால் உணரலாம்.

இனி நாம் இம் மாபெரும் புலவர்களின் பாடல்களில் அமைந்த ஒத்த கருத்துக்களைக் காண்போமாக. திருமந்திரம், திருக்குறள் நூல்களில் அமைந்த தலைப்புக்களின் அமைப்பு இவ்விரு நூற்களிலும் ஒத்துக் காணப்படுகிறது. இதனை : கடவுள் வாழ்த்து, அன்புடைமை, கல்லாமை, கல்வி, கள் ளுண்ணுமை, கொல்லாமை, நடுவுநிலைமை, புலால் மறுத்தல், பிறர்மனே தயவாமை, வானச் சிறப்பு, பொறையுடைமை, பெரியாரைத் துணைக்கோடல், தவம், துறவு, கூடாஒழுக்கம்: வாய்மை, ஊழ், நல்குரவு, அவா அறுத்தல், புறங்கூருமை ! வாய்மை, என்ற தலைப்புக்களைக் கொண்டு உணர்ந்து கொள்ள லாம். நிலையாமை என்ற தலைப்பில் திருவள்ளுவர் அமைத் தனர்; திருமூலர் உயிர் நிலையாமை, இளமை நிலையாமை, யாக்கை நிலையாமை என்று பிரித்துப் பாடினர்.

இறைவனைப்பற்றி இவ்விரு புலவர்களும் குறிப்பிடும் போது திருமூலர் அறிவுடையார் நெஞ்சொடு', 'ஆதி பகவனும், கமலமலர் உறைவான் அடி," "போது உகந்தேறும் புரிசடையான் அடி, "தன்னை ஒப்பார் ஒன்றும் இல்லாத் தலை