பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

&

இத் தொகுப்புநூலில் எடுத்துக் கொடுக்கப்பட்ட மந்திரங் களின் பொருளைப் படிப்பவர்கள் நன்கு அறியும் பொருட்டு, ஒவ்வொரு மந்திரத்தின் தலைப்பில் அம்மந்திரக் கருத்தையும், அதன்பின் மந்திரத்தின் பொருளை எளிய உரைநடையிலும், அவ்வம் மந்திரத்தில் வரும் கடின சொற்களுக்குரிய பொருளை யும், இன்றியமையாத விளக்கங்களையும் தந்துள்ளேன். மந்தி ரத்தைத் தங்குதடை இன்றி வாசிக்கக் கடின சக்திகளைப் பிரித்தும் மந்திரங்களை அச்சிட்டுள்ளேன்.

இத் தொகுப்பு நூலில் என்னல் எழுதப்பட்ட பதினைந்து கட்டுரைகள் இத்தொகுப்பு நூலுக்கு அணி செய்யும் முறை யில் இணைக்கப்பட்டுள்ளன. இக்கட்டுரைகள் திருமந்திரத் தைப் பற்றி ஆராய்ச்சி செய்வார்க்குப் பயன்படும் என்பது எனது கருத்து. இக் கட்டுரைகளின் வழி, தமிழில் மந்திரம் உண்டு என்பதும், தமிழ்த் தோத்திரப் பாடல்களால் கோவில் களில் அர்ச்சனைகளை நடத்தலாம் என்பதும் உணர்த்தப் பட்டுள்ளன. திருமூலர் வரலாற்று மாண்பு, காலம், திரு. மந்திரச் சிறப்பு முதலானவை பற்றிய கட்டுரைகளும் இணைக்கப்பட்டுள்ளன. திருவள்ளுவரும் திருமூலரும் ஒத்த கருத்துடையவர் என்பதும் ஒரு கட்டுரை வாயிலாக விளக்கப் பட்டுள்ளது. இவையே அன்றித் திருமந்திரத்தில் வரும் பலவகைச் சக்கரங்களுள் வயிரவச் சக்கரம் பற்றி விளக்கும் கட்டுரையும் அமைந்துள்ளது. திருவாவடுதுறை திருமந்திர மா நாட்டில் திருமந்திரம் பற்றிப் பேசிய எனது பேச்சும் கட்டுரை வடிவில் சேர்க்கப்பட்டுள்ளது.

தமிழ்மந்திரமாகிய இத்தொகுப்பு நூலில், எந்த எந்தக் கருத்துக்கள் அடங்கிய திருமந்திரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுத் தரப்பட்டுள்ளன என்பதை அறிய அவாவுவோர், இறுதியில் திருமந்திரக் கருத்துத் தலைப்பு என்னும் பகுதியைச் சிறிது உற்று நோக்கின் நன்கு உணர்ந்து கொள்வர்.

- இத்தொகுப்பு நூலில் சைவத் திருமுறைகள் பன்னிரண் டனுள் பத்தாவது திருமுறையாகத் திகழும் திருமந்திர நூலில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_மந்திரம்.pdf/8&oldid=571185" இலிருந்து மீள்விக்கப்பட்டது