பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81

శ్రీ

பூலோகத்திற்கு வந்து, அருளுபதேசம் செய்து, தமது தண்ணிய திருவடிகளைத் தலைமைக் காவலாக வைத்து, உள்ளத்தை உருக்கி, இன்பமாம் அகக்கண்ணக் காட்டி, ஆணவத்தை அறுத்தான் என்ற கருத்தே இப்பாடலின் கருத் தாகும். இ ைற வ ன் பக்குவப்பட்ட ஆன்மாக்களுக்கு விண்ணின்று இழிந்து வினைக்கீடா மெய்க் கொண்டு தண்ணின்ற தாளைத் தலைக்காவல் வைப்பன் என்ற அனுபவத்தை, மணிமொழியார் மணிவாசகத்துள்அருபரத்து ஒருவன் அவனியில் வந்து குருபரளுகி அருளிய பெருமை” எனப்பாடிப் பரவசம் உறுவர். இறைவன் திருவடி பிறவியாம் வெம்மைக்குத் தண்ணிழலாய் இருத்தலின் தண்ணின்ற தாளே” என்றனர். காணும் பெற்றி சீவனுக்கு இன்மையானும், காட்டக் காணும் நிலையே அஃது உடமையானும் காட்டி என்றனர். "காண்பார் ஆர் கண்ணுதலாய் காட்டாக்காலே" என்பது அப்பர் அருள்வாக்கு. ס

நமது சித்தாந்த சமயத்துள் திருவடியின் பெருமை குறித்துப் பேசப்படுவது போல வேறு எச்சமயத்தும் அத்துணைச் சிறப்புடன் பேசப்படுதல் இல்லை என்பதை அறுதி யிட்டுக் கூறலாம். பிற சமயத்தவர்கள் திருவடிகளைச் சிறப் பித்துக் கூறினும், சிவசமயத் திருவடிகளின் உருவம், குணம் முதலானவை அத்திருவடிகட்குக் கூறப்பட்டில. திருவடியே ஞானம் என்பதும், திருவடியே சிற்சக்தி என்பதும் சித்தாந்த செம்பொருட் கருத்துக்களாம்.

"திருவடி பேசிவ மாவது தேரில்

திருவடி பேசிவலோகஞ் சிக்திக்கில் திருவடி யேசெல் கதியது செப்பில் திருவடி பேதஞ்சம் உள்தெளி வார்க்கே. எனக் கூறப்பட்டுள்ளது. இதனுலேதான் தண்ணின்ற தாளைத் தலைக்காவல் எனக் கூறவேண்டியதாயிற்று.

பொதுவினுள் நந்தி ஞான குருவாக வந்து அருள்புரிவன் 叙严、 குது கண்டோம். அப்பொதுவினுள் நந்தி பக்குவப்

~{3