பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83

83

டதைக் காணலாம். சிவயோகமாவது, சித்து இவை அசித்து இவை என அறிந்து, யோகத்தின் வாயிலாகச் சிவஒளியுடன் கலந்திருப்பது. அவயோகம் என்பது சித்திகளைத் தந்து போகங் களைத் துய்க்க வழிவகுக்க வல்லது. அவன் பதிபோதல் இறை வன் திருவடியாம் கரையில் சேர்தல். இங்ங்ணம் அவயோகம் புகாவண்ணம் செய்து, சிவயோகத்தில் புகுமாறும் செய்தவன் நந்தி ஆதவின், அவரை நவயோக நந்தி என ஆசிரியர் பாராட்டிப் பேசினர்.

முப்பொருள் உண்மையை அறிவிப்பதே சைவ சித்தாந் தத்தின் அடிப்படைக் கொள்கை. அந்தப் முப்பொருண்கள் இறை, உயிர், தளை என்பன. இவற்றையே பதி, பசு, பாசம் என்பர். இவற்றையும் செம்மையுற உபதேசத்தில் கறியுள் ளார். முப்பொருளுண்மையினை உணர்த்தியதோடன்றிப் பசுவின்தன்மை பாசத்தின் தன்மை இன்ன என்பனவற்றையும் அழகுற்:

"பதியினைச் சென்று அணுகாப் பசுபாசம்'

என்று உபதேசித்தருளினர். இவ்வாறு அணுகா நிலையில் இருப்பின், அப்பக பாசம் நீக்க வழியிலதோ என்ற ஐயம் எழும் ஆதலின், உடனே ஆசிரியர், இறைவனது அருட்பெருங் கருணையினை உணர்த்தும் நிலையில், பதி அணுகில் பசு பாசம் நிலாவே' என்று அருளிப் போந்தார்.

இன்ைேரன்ன நுட்பங்களை அறியப் பெருந்துணையாவான் குருவே என்பதைப் பன்முறை கூறினும் பயனுடைத்தாகும் ஆதலின்,

"அறிவைம் புலனுடனோன்ற தாகி

நெறியறி யாதுற்ற நீராழம் போல

அறிவறி வுள்ளே பழிந்தது போலக்

குறியறி விப்பான் குருபர ளுமே” என்றனர். இதன் பொருள் அறிவு ஐம்புலனுடனே கூடி, ஆழமான நீர் நிலையில் இறங்கி ஏறுதுறை சிறிதும் அறியாது