பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

த்ரீ

செல்லாது, நம்வழி அவற்றை அடக்கி ஆள்வதாகும். ஆமை தனது நான்கு கால்களையும் தலையையும் ஆபத்துக் காலத்தில் உள்ளிழுத்துக் கொண்டு அடக்குதலைக் காண்க. இறைவன் பெரியவற்றிற்கு எல்லாம் பெரியவன்; சிறியவற்றிற்கு எல்லாம் சிறியவன். இந்த உண்மையினை அறிதல் வேண்டும் என்பார். 'அறிந்து' என்றனர். பெருமை சிறுமைமட்டும் அறிதல் அமையாது, அவற்றின் அருமை எளிமைகளையும் அறிதல் வேண்டும் என்பார், அருமை எளிமை அறிந்து என்றனர். இருமையும் கேட்டலாவது, இந்தப் பிறவி வந்த விதத்தையும், மறுபிறவி வருவதையும் அறிவன் நூலாலும் குருவினது உபதேசத்தாலும் அறிந்து கொள்ளுதலாம். இப்படி அறிதல் கடமையாக இருக்கவும், அங்ங்ணம் கேட்டறியாது வீணே காலத்தைப் போக்குகின்றனரே மக்கள் என்ற காரணத்தால், 'புரையற்றே இருந்தார் என அருளினர். குருவுபதேசப் பெருமையை உணர்த்துவந்த மந்திரம்,

'புரையற்ற பாலினுள் கெய்கலந் தாற்போல் திரையற்ற சிந்தையுள் ஆரியன் செப்பும் உரையற் றுணர்வோ ருடம்பிங் கொழிந்தார் கரையற்ற சோதி கலந்தசத் தாமே என்பது. இந்தத் திருமந்திரத்தின் முதலடி பாலில் படுநெய் போல் மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்' என்னும் அப்பர் திருவாக்கை நமக்கு நினைவூட்டுகின்றது. இறைவன், புரை இடாத பாலில் நெய் மறைந்து வெளிப்படையாகத் தோன்ருமலிருப்பதுபோல், எல்லா உயிரின் அகத்தும் மறைந் திருப்பினும், பதைப்பாகிய அலையற்ற ஆருயிரின் தூய உள்ளத் தில், தயிரின் நெய்போல் வெளிப்பட்டருள்வன் என்பதாம். அத்தகைய இறைவன் செய்யும் உபதேசம் அமைதிக்குக் காரணமாதலின், உரை அற்று' என்று உணர்த்தப்பட்டது. அக்காலத்தில் அவர்கள் சிவம் நினைவோர் ஆதலின் அவர்களின் விண்போக உடல் நீங்கும். உடலை நீக்கித் திருவருள் ஒளியிற் கலந்து உலப்பிலா ஆனந்தமாய்ச் சிவத்தோடு கூடிய சத்துப் பொருளாவர். இதனைச் சிவஞான சித்தியார், 'கண்ணுதல் தன்