பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

91

葱

சிறைவதனில் கலந்து காயம் கழிந்தக்கால் எங்குமாய்க் கருதரன்பால் நிற்பன்' என்று குறிப்பிடுமாற்ருலும் நாம் அறியலாம்.

வை. ஒளி,ஊறு,ஓசை, நாற்றம் எனும் பூத முதலாகிய தன் மாத்திரைகள் ஐந்தும் ஒடுங்கும் முறையில், ஒன்றனுள் ஒன்முய் ஒடுங்கும் முறைபற்றி விளக்கவந்த மந்திரம்,

"சத்தமுதலந்துக் தன்வழித் தான்சாரில்

சித்துக்குச் சித்தன்றிச் சேர்விடம் வேறுண்டோ சுத்த வெளியில் சுடரில் சுடர்சேரும் அத்தம் இதுகுறித் தாண்டுகொள் அப்பிலே என்பது. சத்தமுதல் ஐந்து என்பன சப்த பரிச, குட்i, ரஸ்ப், கந்தம் என்பன. இவை தன் வழிச்சார்தல் என்பது பூதாதி அகத்தின்கண் ஒடுங்குதலாம். 'ஒசைநற் பரிசரூப இரச கந்தங்கள் என்று, பேசு மாத்திரைகள் ஐந்து பிறக்கும் பூதாதி கத்தின் என்று சிவஞானசித்தி கூறுதல் இதற்குச் சான்ரும். எது எதனின்று தோன்றியதோ அது அதனுள் ஒடுங்கும் என்பது சித்தாந்த மரபு அன்ருே? சித்துக்குச் சித்தன்றிச் சேர்விடம் வேறு உண்டோ? என்ற விஞ உணர்த்த உணரும் சித்தாகிய ஆன்மாவுக்குச் சிவத்தோடன்றி வேறு சேருமிடம் இல்லை என்பது பெறப்படுகின்றது அன்ருே? சுடரில் சுடர்சேரும் என்றது திருவருள்வெளியில் விளக்க விளங்கும் அறிவொளி யாகிய உயிரும், தானே விளங்கும் பேரறிவொளியாகிய சிவனும் ஓரினச்சுடர் ஆதலின் ஒன்றுசேரும் என்பதாம். இங்கனம் உணர்த்தியதோடன்றி நன்கு ஆய்ந்து தெளிந்த நீர் போல் அனுபவத்தில் இருந்து பார்க்கவும் கட்டளையிட் டருளினர். இதனை மேலும் நன்கு அறிவிக்க விரும்பிய ஆசிரியர் சீவன் சிவத்தோடு அடங்கும் விதத்தைக் கீழ்வரும் திருமந்திர வாயிலாகக் கூறலுற்ருர். -

"அப்பினிற் கூர்மை ஆதித்தன் வெம்மையால்

உப்பெனப் பேர்பெற்றுருச்செய்ததவ்வுரு அப்பினில் கூடிய தொன்ருகு மாறுபோல் செப்பினில் சீவன் சிவத்து ளடங்குமே”