பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95

95

தம்முடைய திருத்தொண்டனகிய அடியேனுக்கு, ஷடாக்ஷர் மாகிய மந்திரத்தை உபதேசம் செய்து ஏற்றுக்கொள்கிரு.ர்கள் என்கிற கருத்து அடியேனுக்குத் தோன்றும் வண்ணம், இவ் வயிரவச் சக்கரம் என்கிற தலைப்பிலே உள்ள ஆறு திருமந்திரங் கள் விளங்குகின்றன; ஆதவின் அடியேன் இன்று முதல் குருமகாசந்நிதானம் அவர்களின் அடித்தொண்டனுகி விட்டேன் என்று உன்னி உன்னி உளம் குளிர்கின்றேன்.

வயிரவர் யார்? அவரது சக்கரம் எது? அதன் பயன் யாது? அவரைப் பூசை செய்ய வேண்டியதன் அவசியம் என்ன? என்பனவற்றை இனிக் காண்போமாக. - .

இறைவனுடைய மூர்த்தங்கள் அறுபத்து நான்கு என்பதும், அவற்றில் 38ஆம் மூர்த்தம் வயிரவமூர்த்தம் என்பதும் தெரியவருகின்றன. இறைவன் எப்போது எதற்காக வயிரவத் திருக்கோலத்திலே எழுந்தருள வேண்டிய அவசரம் ஏற்பட்டது என்பதை அறிதல் வேண்டும். -

இரண்யரக்ஷன் என்ற ஒர் அசுரன் இருந்தான். அவனது மகன் அந்தகாசுரன் என்பவன். அவன் தேவர்களுக்கு மிகுந்த துன்பத்தைக் கொடுத்துவந்தான். அப்படி இறைவனிடத் திலிருந்து பெற்ற வரத்தைக் கொண்டு நல்லவர்களுக்கெல் லாம் துன்பத்தை உண்டாக்கி வந்த காரணத்தினல், அவனேச் சங்காரம் செய்வதற்காக இறைவன் வயிரவத் திருக்கோலம் கொண்டார். உலகத்து உயிர்களுக்கெல்லாம் வருத்தம் உண்டாக்கிளுன் என்று வானவர் யாவரும் இறைவனிடம் ஓடி வந்து முறையிட, அவனைச் சங்காரம் செய்வதற்காக இறைவர் வயிரவராகத் தோன்றினுர் என்றும், குலங் கைக்கொண்டு அவனைக் கொன்ருர் என்றும், திருமந்திரத்திலேயே இரண்டாம் தந்திரத்தில் பதிவலியில் அட்ட வீரட்டத்தைப் பற்றிச் சொல்லும்போது திருமூலத் தேவர் குறிப்பிடுகின்ருர்

கருத்துறை அந்தகன் தன்போல் அசுரன்

வரத்தின் உலகத் துயிர்களே எல்லாம் - வருத்தஞ்செய் தானென்று வானவர் வேண்டக் குருத்துயர் சூலங்கை கொண்டு கொன்ருனே'