பக்கம்:தமிழ் மருந்துகள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11

2. ஒரு இரஸ்தாளி, வாழைப்பூவை, மட்டையை நீக்கி எடுத்து, நரம்போடு போட்டு அரைக்காற்படி பசும்பால் விட்டு இடித்து வடிகட்டி, பனங்கற்கண்டு கலந்து குடிக்க வெட்டைச் சூடு வியக்கத்தக்க முறையில் விலகும். காலை நேரத்தில் மட்டும் 3 நாள் மருந்து போதுமானது. புளி, காரம் கூடாது.

மூல நோய்க்கு

1. கோரைக்கிழங்கு ஒரு பங்கும், வெள்ளைப்பூண்டு இரண்டு பங்குமாக வைத்து நசுக்கி, எலுமிச்சம் பழ அளவு எடுத்து, பாலிற் போட்டுக் காய்ச்சி காலை மாலை சாப்பிடவும். கண்டிப்பாய்ப் புளி கூடாது.

2. மூலப் புண் ஆறுவதற்கு பாவட்டை இலையை அவித்துக் கட்டுவதே போதுமானது. இரண்டே வேளையில் குணம் காணலாம்.

3. மூலநோய் உள்ளவர்கள் இப்போது காப்பிக் குடியர்களாயிருந்தால் அதை உடனே நிறுத்திவிட்டு, காலையிற் குளித்தவுடன் பழைய சோறு, தயிர், சுண்டை வற்றல், ஈர வெங்காயம், நீராகாரம் ஆகியவைகளைச் சாப்பிட வேண்டும். மருந்துமில்லை; அலுப்பும் இல்லை; பத்தியமுமில்லை; பணச் செலவுமில்லை; ஐந்தே நாட்களில் அருமையான குணத்தைக் காணலாம்.

4. ஊமத்தை இலையைச்சாறு பிழிந்து 5 முதல் 8 சொட்டுகள்வரை அரைக்காற்படி எருமைத் தயிரில் விட்டுக் கலக்கிக் குடிக்க, மூலக்கடுப்பும் இரத்த மூலமும் தீரும். 8 சொட்டுக்குமேல் கண்டிப்பாய்க்கூடாது, தினந்தோறும் காலை வேளைகளில் மட்டும் 3 நாள் மருந்து போதுமானது.

(இது நச்சு மருந்து: எச்சரிக்கை!)

த.ம.-2