பக்கம்:தமிழ் மருந்துகள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

19

3. ஈர வெங்காயம், நற்சீரகம், ஓரிதழ்த் தாமரை இம்மூன்றும் சமமாக வைத்து நசுக்கி, மெல்லிய துணிக்குள் வைத்துக் கண்ணில் பிழிய, கண்களிலுள்ள முப்படலமும் தீரும்.

காலை வேளைகளில் மட்டும் மூன்று சொட்டுகள் வீதம் மூன்று நாள் மருந்து போதுமானது.

கண்களில் இரத்தக்கட்டு

கருவேலங் கொழுந்தைப் பிள்ளைப்பால் விட்டு இறுகலாக நன்றாக அரைத்துச் சிறிது வெண்ணெய் கூட்டிப் பிசைந்து வில்லை தட்டி, இரவில் படுக்குமுன் மூடிய கண்களின் மேல் வைத்து, அதன்மேல் ஓர் இலையை வைத்து மூடித் துணிகொண்டு கட்டிப் படுத்துக் கொள்ளவும்.

காலையில் அவிழ்த்து எடுத்து விடவும். கண்களில் உண்டான இரத்தக்கட்டுக் குறைந்து, உடனே குணப்படும். இரண்டு நாளைக்குமேல் மருந்து வேண்டிய தில்லை.

இதே மருந்தைப் படுக்கும்போது உள்ளங் கால்களில் அல்லது தலை உச்சியில் வைத்துக் கட்டிக்கொண்டு படுத்தால், அது உஷ்ணத்தைத் தணித்துக் குளிர்ச்சியைத் தரும்.

காமாலை

1. கரிசலாங்கண்ணி இலைகளைக் கொண்டு வந்து கசக்கிச் சாற்றை வேளை ஒன்றுக்கு ஒரு தேக்கரண்டி வீதம் காலையும் மாலையும் சாப்பிடவும். மூன்றே நாட்களில் குணமாகும். கீழாநெல்லிச் சாறும் நல்லது.

2. நாட்டுக் காட்டாமணக்கு இலைகளை அரைத்து, சரிக்குச்சரி எருமைவெண்ணெயில் குழைத்துக் காலையும் மாலையும் கொட்டைப் பாக்கு அளவு சாப்பிட மூன்று நாட்களில் குணமாகிவிடும்.