பக்கம்:தமிழ் மருந்துகள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

25

கருந்தேமலுக்கு

மருதோன்றி இலையுடன் சவுக்காரம் சேர்த்து, அரைத்துப் பூசிவந்தால் கருந்தேமல் ஒழியும். படை, சொரி சிரங்கு, நரம்பு இழுப்பு, கால் வலி முதலியவைகளுக்கும் மருந்து இதுவேதான்.

கால் கடுவானுக்கு

இரச கற்பூரத்தையும் வெண்ணெயையும் கலந்து கல்வத்திலிட்டு நீண்ட நேரம் அரைத்துத் தடவ, கால் கடுவான் நீங்கும் அது நஞ்சு ஆதலின் நாவில் படாதபடி பாதுகாத்துக் கொள்ளுதல் வேண்டும். தொண்டை வலிக்கு சுண்ணாம்பும் விளக்கெண்ணெயும் கலந்து அடுப்பில் காய்ச்சிப் பொறுக்கும் அளவு சூட்டோடு வெளியில் தடவ தொண்டைவலி, தொண்டைக்கட்டு முதலியவை நீங்கும்.

மயக்கத்திற்கு

சீந்தில் தண்டுச் சாற்றைப் பசும்பாலிற் கலந்து உட்கொண்டால், அடிக்கடி வருகிற தலை மயக்கம், கிறு கிறுப்பு முதலியவைகள் உடனே நீங்கும்.

முகம் அழகு பெற

வெள்ளைச் சாரட்டணை மூலிகையின் வேரையும், தோல் நீக்கிய மஞ்சளையுஞ் சேர்த்து, எருமைப்பால் விட்டு அரைத்து. முகத்தில் தடவிக் குளிப்பதால் முக அழகு உண்டாகும். கருப்பு நிறம் மாறவும், வெடிப்பு நாற்றந் தீரவும் உடம்பில் தடவிக் குளிக்கலாம்.

உடல் அழகு பெற

இரவில் உறங்குமுன் பசும்பாலில் தேனும், குங்குமப் பூவும் கலந்து சாப்பிட, உடலில் மினுமினுப்புத் தோன்றும்.