பக்கம்:தமிழ் முழக்கம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. கவியரசர் முடியரசன் 0 19

மண்ணை விடுத்தெழுந்து மாந்தன் உடல்தவிர்த்து வண்ணப் பருந்தேபோல் வானிற் பறந்தாலும் செத்துக் கிடக்குஞ் சிறப்பில் இழியுணவை நத்திப் பறந்திறங்கும் நாட்டத்தை விட்டுவிடு; சொன்னதையே சொல்லுங் கிளிப்பிள்ளை யாகாமல் உன்னதையே சொல்லி உயரப் பறந்துதிரி; மாட்டின் முதுகிருந்து மாறாது கொத்திமிக வாட்டியதைப் புண்படுத்தும் வாடிக்கைக் காகமெனப் புண்படுத்த ஆசைகொளும் புன்செயலை விட்டுவிடு; பண்படுத்தப் பாடிப் பழகிப் பறந்துதிரி, 140 வான வெளியெங்கும் வட்டமிட்டு வட்டமிட்டே ஆன அமைதிக் கடையாள வெண்புறவாய் நாளும் பறந்துதிரி, நாட்டில் நலம்பெருகத் தோளை உயர்த்தித் துணிந்தே பறந்துதிரி, காலைக் கதிரவனைக் கண்டபினும் தூங்காதே, சோலைக் குயிலாகிச் சுற்றிப் பறந்துதிரி; கூவிப் பறந்திடடா கொள்கையைப் பாடிடடா தாவிக் குதித்திடடா என்றாள் தமிழன்னை; நாடிச் சிறகடித்து நாட்டின் நிலையுயரப் பாடித் திரிந்தேன் பறந்து. 150

திருவள்ளுவர். அவ்வை, இளங்கோ, சாத்தனார், திருத்தக்கதேவர், கம்பர், புகழேந்தி, ஒட்டக்கூத்தர், செயங்கொண்டார், திரிகூடராசப்பக் கவிராயர், உமறுப்புலவர், இராமலிங்க வள்ளலார் - இவர்களைப்

பற்றிப்பாடிப் பன்னிருவர் அரங்கேறினர்.

உலகத்தமிழ் மாநாடு சென்னை

6.1. 1968

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_முழக்கம்.pdf/18&oldid=571626" இலிருந்து மீள்விக்கப்பட்டது