பக்கம்:தமிழ் முழக்கம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குயில்பாட்டு

கலிவெண்பா لٹا

பாரதியின் /roಖಕ.ಹಚ பற்பலவாய்ப் பூத்திருக்கும் சீருயர்ந்த பூங்காவுட் சென்று குயிற்பாட்டை நட்ட நடுஇரவில் நான்சுவைத்தேன்; அப்பாட்டில் தொட்டஇடமெல்லாம் சுவையேறி நின்றதம்மா! 'முன்னிக் கவிதைவெறி மூண்டே நனவழியப் பன்னிப் படைத்தளித்த பாவளத்தை என்னென்பேன்! காதல் வெறியேறிக் கள்மயக்கந் தானேறி மோதித் துளைக்குமொரு மோகத் துயராலே புத்தி தடுமாறிப்பொம்மையெனத் தான்நடந்து நத்தி மலர்ச்சோலை நான்கு புறந்தேடிக் 10 கானக் குயிலிசைத்த காதல் நெடும்பாட்டால் மோனப் பெருவெளியில் மோகப் பெருமயக்கில் அக்குயிலி கள்ளிதழை ஆசையொடு முத்தமிட்டுச் சொக்கிச் சுகந்தனிலே சொல்லெல்லாஞ் சூடேற்றிப் பாட்டை வடித்தெடுத்துப் பக்குவமாத்தேன்கலந்து நாட்டுக் களித்தஒரு நற்பாங்கை நான்சொலவோ? மாஞ்சோலை வான்கிளையில் வண்ணக் குயிலிருந்து தீஞ்சுவையிற் பாடுந் திறத்தினைத்தான் செப்புவனோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_முழக்கம்.pdf/19&oldid=571627" இலிருந்து மீள்விக்கப்பட்டது