பக்கம்:தமிழ் முழக்கம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* கவியரசர் முடியரசன் 0 31

அரும்புமிள நகைஎங்கே? கொவ்வை தோற்கும்

அவ்விதழின் நிறமெங்கே? எழிலும் எங்கே?

சுரும்புமுரல் கடிமலர்ப்பூங் கொத்தும் எங்கே? குழற்பூசும் நறுநெய்தான் எங்கே எங்கே?

இரும்புமணம் குழைவிக்கும் துயரந் தாங்கி

இருக்கின்ற மாமணியை அங்குக் கண்டேன். 6

சுடர்காலுஞ் செங்கதிரை வழிய னுப்பித்

தொடுவானில் வெண்மதியம் ஆட்சி செய்ய, மடவார்கள் கொழுநரொடு மாட முன்றில்

மலர்தூவு பஞ்சணையிற் சார்ந்து கொண்டான் தடமார்பில் புதையுண்டும் புலந்தும் கூடித்

தண்ணிலவுப் பயன்கொண்டு, மலர்கள் சிந்தக் கொடிபோல நுடங்கினராய்த் துயிலில் ஆழ்ந்தார்;

குலமகளாம் கண்ணகியோ துயரில் ஆழ்ந்தாள். 7

தற்கொண்ட காதலனைத் தணியா இன்பந்

தந்தவனைக் கோவலனைப் பிரிந்து நின்ற விற்கொண்ட புருவத்தாள் நினைந்த ழுங்கி

வேதனையில் அழுதழுது சிந்தும் நீரால் சொற்கொண்ட புகார்ப்பதியின் கடல்நீர் யாவும் சுவைமாறி உவர்ப்பாகிப் போயிற் றந்தோ! இற்கொண்ட அவளிருப்பு நெய்தல் ஆகும்

இரங்குதலே அவளுரிமைப் பொருளும் ஆகும். 8

கண்ணகியை ஏன்பிரிந்தான்? அவளிடத்துக்

கண்டகுறை ஒன்றுண்டா? இல்லை இல்லை;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_முழக்கம்.pdf/30&oldid=571637" இலிருந்து மீள்விக்கப்பட்டது