பக்கம்:தமிழ் முழக்கம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ՅC) * தமிழ் முழக்கம் 9

கடலாடை உடுத்தமகள் கதிரோன் என்ற

கணவனவற் பிரிந்தமையால் மலர்க்கண் மல்கித் தடநீரைச் சிந்தமருண் மாலை கூடித் -

தரையெல்லாம் மயக்குறுத்தத் திசைகள் சோர, இடமேதும் இல்லை.எனச் சொல்லும் வண்ணம்

இரவெழுந்து படையெடுத்துச் சூழ்ந்து நிற்க, உடுவாகக் கண்ணிரைத் துளித்துக் கொட்டி

உயர்வானில் நிலவணங்கு தனித்து நின்றாள்.

புறமெல்லாம் அவலத்தின் குறிகள் காட்டப்

பொன்னிறத்த மனையகத்துப் புகுந்து சென்றேன்; நிறமெல்லாம் ஒளிகுறைந்து, பிரிவுத் துன்பம்

நெஞ்சமெல்லாம் மிகநிறைந்து, புவியிலுள்ள துறவெல்லாம் சேர்ந்ததுபோல் நலம்துறந்து,

துணைவிழிகள் நீர்துறந்து, துயில்துறந்து-அவ் விரவெல்லாந் தவஞ்செய்யுங் கற்புத் தெய்வம்

இன்னலுக்கோர் வடிவுதந்து விளங்கக் கண்டேன்.

அடிமலருங் கொடியிடையும் வறிதே யாக

அணிசிலம்பும் மேகலையும் பேழை வைகும்; நெடிதுயிர்ப்ப மங்கலநாண் அணிந்த தன்றி

நேரிழைகள் அத்துணையுந் துறந்த மேனி கொடியெழுத மறந்துவிட்ட தோளில் வண்ணக்

குங்குமத்தின் சுவடில்லை பொலிவும் இல்லை; வடிபுனலால் விழிமுழுதும் சிவந்ததன்றி

வண்ணவிழி மையெழுதிக் கருக்க வில்லை.

கரும்புருவச் சிலைநுதலின் திலக மெங்கே?

காதமர்ந்து தோள்வருடும் குழைகள் எங்கே?

--سے

|:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_முழக்கம்.pdf/29&oldid=571636" இலிருந்து மீள்விக்கப்பட்டது