பக்கம்:தமிழ் முழக்கம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

0 கவியரசர் முடியரசன் 0 33

மீண்டுத்த புனல்தொடுத்த வயல்வ ரப்பில்

மெலிந்தொதுங்கி அன்னங்கள் வாழ்வ தென்கொல்?

தேனடுத்த மொழியாளின் நடையைக் கற்கத்

திணறியதால் தவறியதால் வெட்கி யன்றோ?' 12

'மழலைமொழிக் கிள்ளைளலாம் பிரியா தங்கு

மங்கையிவள் கையகத்தே நிற்ப தென்கொல்? குழலிசையும் யாழிசையும் அமிழ்தப் பாகும்

குழைத்தெடுத்த இவள்குரலைக் கற்க அன்றோ? அழகுவலம் புரிமுத்தே கரும்பே தேனே!

அருமருந்தே கதிர்மணியே! பொன்னே! நின்னைச் சுழல்அலையிற் பிறவாத அமிழ்தம் என்கோ?

சொல்யாழிற் பிறவாத இசைதான் என்கோ?' 13

என்றெல்லாம் கண்ணகியை நலம்பா ராட்டி

இசைத்தவன்தான் அவள்நலியப் பிரிந்து விட்டான்; மன்றலன்று வாழ்த்துங்கால் மாதர் கூடி

மன்னவனைப் பிரியாமல் கவவுக் கைகள் ஒன்றுதலில் ஞெகிழாமல் அறுக தீதென்

றுரைமொழியை எதிர்மறையால் மொழிந்து நின்றார்: அன்றவரே பிரிவுண்மை அறிந்த தாலே

அவ்வண்ணம் பகர்ந்தனரோ அந்தோ! அந்தோ 14

காதலரைப் பிரிமாதர், பெற்றெடுத்த

கனிமழலை மகவுமுகம் நோக்கி நின்று

நோதகவு தணிந்திருப்பர்; பிரிவில் வாடி

நுடங்குகின்ற கொடியிடையாள் கண்ண கித்தாய்

கவவுக் கைகள் அனைத்ததைகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_முழக்கம்.pdf/32&oldid=571639" இலிருந்து மீள்விக்கப்பட்டது