பக்கம்:தமிழ் முழக்கம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நமது வீரம்

கலிவெண்பா

வீரமுடன் காதல் விழியாம் எமக்கென்று கூறியிவண் வாழ்ந்த குலத்திற் பிறந்தவர்நாம்: காதலெனிற் காளையர்க்குக் கற்கண்டாம்; அஃதுரைக்க ஈதன்று நேரம்; இருபாலும் போர்முகில்கள் சூழும் பொழுதத்துச் சொல்லரிய வீரமன்றிப் பாழும் பிறவுணர்வைப் பற்றிடுமோ நம்நெஞ்சம்? ஆதலினால் வீரத்தை ஆர்வமுடன் பாடுதற்குப் போதருமுன் அவ்வீரம் பூக்குமிடம் நாமறிவோம்; நாடும் மொழியும் நலமிக்க இல்லாளும் வீடும் முதலா விளம்பும் உரிமைகளில் 10 ஊறு விளைவிக்க உள்ளும் பகைகானின் வீரம் முளைக்கும் விளைநிலங்கள் ஆகுமவை: மன்னர் விளைத்த மறப்போரும், மக்களிங்கு நென்னல் தொடுத்த அறப்போரும் நேர்சான்றாம்; 'ஈயென் றிரந்தால் எனதாட்சி மட்டுமன்று மாயும் உயிரெனினும் மாற்றமின்றி ஈந்திடுவேன்; எங்கள்குல மானத்தை ஏற்றமிகும் வீரத்தை நென்னல் -நேற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_முழக்கம்.pdf/39&oldid=571646" இலிருந்து மீள்விக்கப்பட்டது