பக்கம்:தமிழ் முழக்கம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 9 தமிழ் முழக்கம் 9

போக்கும் பொழுதில் புரிகின்றேன் முத்தொழிலும்; முந்நீர்மை செய்திங்கு முப்பொழுதும் வாழ்கின்ற என்னிர்மை சொன்னேன் இறைவனெனில் ஒவ்வாதோ? இத்துணைதான் என்பெருமை என்றெண்ணிப் போகாதீர்; அத்தனையும் சொல்லில் அடங்கா தடங்காது; தாயைப் பிழைத்தாலும் தண்ணீர்க் கொருகுறையும் தோயப் பிழைக்காதீர் தொன்மை மொழியிஃதாம்; 80 என்றுரைத்த போதும் இருநிலத்து மாந்தரெலாம் நன்றியின்றிச் செய்துவரும் நாலாயிரம்பிழையும் ஏற்றுப் பொறுக்குமெனை எள்ளி நிலந்தன்னைச் சாற்றும் பொறுமைக்குச் சான்றோர் உவமிப்பர்! செல்வரென அல்லரெனச் சிந்தித்துப் பார்ப்பதிலை, அல்லரென நல்லரென ஆய்தல் எனக்கில்லை, நெல்லுக்கும் புல்லுக்கும் நேர்நின்றுதவிடுவேன் சொல்லுக்குச் சொல்லவிலை தோழர் அனைவருமே சாதி சமயங்கள் சண்டையிடுங் கட்சியென ஓதி வருவார்கள் ஒன்றையும் நான்பாரேன்; 90 எல்லாரும் நல்லரென்பேன் யாவருங் கேளிரென்பேன் பொல்லார் எனவுரையேன் பூணும் பகையறியேன். ஆனாலும் ஒர்பகைவன் அந்தோ இருக்கின்றான்; மேனாள்தொட்டென்னிடத்து மேவாப் பகைகொண்டான். தீண்டார் ஒருவருமே தீயன் அவனென்றே: காண்பார் ஒருவரிலர் காந்தும் குணத்தனென: சின்னவன் என்றென்னைச் சீறிச் சிவந்தெழுவான் அன்னவன் முன்னேநான் ஆர்த்துப் படர்ந்தெழுவேன்; பாவம் அவனுடலம் பாழாய்க் கருகிவிடும்; நாவை அடக்காதார் நைந்தழிவர் ஈதுண்மை; 100 snscorso Geigyu@të strzosnu (5th sisteilungste

தீயன் - நெருப்பு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_முழக்கம்.pdf/47&oldid=571653" இலிருந்து மீள்விக்கப்பட்டது