பக்கம்:தமிழ் முழக்கம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. கவியரசர் முடியரசன் 0 49

பேதமிலா நெஞ்சாற் பிணைவதுபோல், உண்மையுளங் கொண்டிலங்கும் நட்பினர் கூறுபடலின்றிக் கண்டுணர்ந்து நெஞ்சம் கலந்தொன்றாய்க் கூடுதல்போல் எப்புலத்துச் சார்ந்தாலும் அப்புலத்து வண்ணம்பெற் றிப்புவியில் வாழ்வேன் எனக்கென வண்ணமிலேன்; பள்ளிச் சிறுவர்க்குப் பாரில் எனைப்போல உள்ளம் மகிழ்விப்பார் உள்ளனரோ? இல்லை.என்பேன்; கூவிப் பலகூறிக் கொட்டமடித் தென்மடியில் தாவிக் குதித்துமிகு தண்டவங்கள் ஆடிடுவர்; 110 தோணிபல செய்து சுதந்திரக் கப்பலினால் வாணிகம் செய்வதுபோல் வட்டமிட்டுத் தாம்மகிழ்வர். பேசும்பொற் சித்திரமாம் பிள்ளை விழிக்கடையில் வீசுமொளி முத்தாய் விளங்கித் ததும்பிநின்று காவியம் வல்லார்க்கும் ஓவியம் வல்லார்க்கும் பூவியக்குங் கற்பனைகள் பூத்துவரச் செய்திடுவேன்; ஊடிவரும் மெல்லியலார் ஒண்மலர்க் கன்னத்தில் ஓடிவரும் நீராவேன்; ஆடவர் கண்டுவிடின் ஐம்புலனும் ஒன்றாகி, அந்தோ நடுநடுங்கி, வெம்பியுளம் வாட்டமுற, வீரம் நிலைகலங்கப் o 120 பொற்றொடியர் நெஞ்சங்கள் பூரித்தே எக்களிக்க வெற்றி பெறவே விளையாட் டயர்ந்திடுவேன்; சால்புணர்ந்தோர் கூறும் தகவுரைகள் கேளாது கோல்பிறழ்ந்தார் ஆட்சியில் கூழுக்கும் வக்கில்லார் கூன்விழுந்த மேனி, குழிவிழுந்த கன்னங்கள், ஏன் பிறந்தோம் என்றேங்கும் நெஞ்சம், இவையுடையார் கண்களிலே தேங்கிக் கசிந்து துளியாகி மண்ணிற் கொடுங்கோன்மை மாய்க்கும் படையாவேன்; சோர்வின்றிப் பாடுபட்டும் சோறின்றிப் பாடுபட

+ L , خ6.محفے

H

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_முழக்கம்.pdf/48&oldid=571654" இலிருந்து மீள்விக்கப்பட்டது