பக்கம்:தமிழ் முழக்கம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5O 9 தமிழ் முழக்கம் 9

ஏர்வென்றி கொண்டமகன் ஏங்கித் தவித்திருக்கும் 130 மண்குடிலுக் குள்ளே மழைவடிவில் நான்புகுவேன்;

புண்ப்டுமா றந்தமகன் பொன்றும் நிலைகண்டு மேற்கூரை ஏறிநான் மெல்ல அழுதிருப்பேன் காற்கூரை எல்லாம் கசிந்துகண் ணிர்வடிப்பேன்; வண்ணமலர்க் காநுழைவேன்; வாய்திறந்த கிண்ணமென எண்ணும் படிவிரிந் தேந்தியுள தாமரையைக் கண்டு மனங்குளிர்வேன்; கண்ணுக் கழகுதரும் வண்டு தமிழ்பாடும் வண்ண மலர்ச்செடிகள், பூத்துக் குலுங்குமெழிற் பூங்கொடிகள் அத்தனையும் பார்த்துச் சிரிப்பேன்; படர்ந்து வருமகிழ்ச்சி o 140 @-ಹಿಹpfyು இலைநுனியில் பூவிதழில் ് மென் uဓါနို துளிபோல வீற்றுக் கொலுவிருப்பேன்; | - பாருலகம் தானியங்கப் பண்ணுதலால் என்பேரை ஆரமிழ்தம் என்றும் அழைத்திடுவர்; இவ்வுலகில் உண்பொருளை உண்டாக்கி உண்பொருளும் நானாவேன்; என்பெருமை இம்மட்டோ? ஏர்முனைநாள் என்னும்நாள் நானில்லை என்றால் நடந்திடுமோ? ஆழ்கடற்கும் கானிலுள புல்லுக்கும் கட்டாயம் என்கருணை வேண்டும் எனவுணர்ந்தே வேதப் பெரும்புலவன் ஆண்டவன்பேர் சொல்லி அடுத்தபடி என்சிறப்பை 150 ஒதி மகிழ்ந்தனன் ஓயாமல் ஆடிவரும் பாதிமதி சூடும் பரமன் சடைமுடிமேல் என்னைஏன் வைத்தான்? எனதருமை கண்டன்றோ! முன்னைத் தமிழ்ச்சுவையில் மூழ்கித் திளைத்தவன்யான் ஏறும் சுவைப்பாட்டின் ஏடுகள் நான்சுவைத்தேன் கூறுமென் சொல்லில் குறையில்லை பொய்யில்லை; நான்சுவைத்து விட்டெறிந்த நாலடியார் ஏட்டைத்தான் தேன்சுவைபோல் நீங்கள் தெரிந்தெடுத்துப் பாடுகின்றீர்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_முழக்கம்.pdf/49&oldid=571655" இலிருந்து மீள்விக்கப்பட்டது