பக்கம்:தமிழ் முழக்கம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

0 கவியரசர் முடியரசன் 0 51

மூழ்கி வருவோர்க்கு முத்தளிப்பேன். சிற்சிலகால் ஆழ்கடலில் செம்பவழ ஆரம் அளித்துவப்பேன்; 160 ஈந்துவக்கும் என்னிர்மை எல்லாரும் நன்குணர்ந்தும் போந்தொருவர் கஞ்சனெனப் பொய்யில் எனையிகழ்ந்தார்: என்பால், உவர்ப்புண்டாம் யார்க்கும் உதவேனாம் வன்பால் இவருரைத்த வாய்மொழியை நம்பாதீர்; நாச்சுவையோ டுண்பது நான்நல்கும் உப்பன்றோ? பேச்செதற்கு - உப்பிட்ட பேரை இகழ்வதற்கோ? மூவா திருக்க முடியா துயிரிருக்கச் சாவா மருந்தளித்தேன் சார்ந்துவரும் வானவர்க்கு: பாலுக்கும் வெண்ணெய்க்கும் பானை திருடிவரும் மாலுக்கு மால்தந்த மாமகளைத் தந்ததன்பின் 170 பாலுங் குடியென்றேன் பாலே குடிகொண்டான்; நாலுந் தெரிந்தவன்தான் நாகரிகம் தேர்ந்தவன்தான் பெண்ணெடுத்த வீட்டில் பிரியா திருந்துவிட்டான் புண்படுத்தும் ஒர்சொல் புகன்றறியேன் இன்றுவரை பிச்சைஎடுத் தெந்நாளும் பித்தன்போல் கூத்தாட்டம் இச்சையுடன் ஆடிவரும் இவ்வாழ்வும் வாழ்வாமோ? என்று வெறுத்தான்போல் ஆலம் எடுத்துண்டான் அன்று துடித்தே அமுதம் பொழிநிலவைக் கொள்ளென்றவற்களித்தேன்; கூறுமிவ் வண்மையால்

வள்ளலென்றோத வகையறியார் என்னைஒரு 18O கஞ்சனென்றால் சீற்றம் கடுகிவரும்; ஆனாலும் 快つ நெஞ்சம் ೧೧ುಲ್ಲಹಹಗಿಷ್ಠಿಣಖ நீண்ட பொறுமையினேன்;

தண்ணளியால் பார்கர்க்குந் தக்க பொறுப்புடையேன் விண்வெளியில் செல்வேன் விரைந்து.

தியாகராசர் கல்லூரி

மதுரை 22.2.1966

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_முழக்கம்.pdf/50&oldid=571656" இலிருந்து மீள்விக்கப்பட்டது