பக்கம்:தமிழ் முழக்கம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

0 கவியரசர் முடியரசன் 0 53

அகழ்வார்க்குப் பசிகளையக் கிழங்கு நல்கி

அங்கங்கே கொடிவள்ளி படர்ந்தி ருக்கும்; முகில்பார்க்கும் பொழுதெல்லாம் மயிலின் கூட்டம்

முழுமகிழ்வால் தோகைவிரித் தாடி நிற்கும்: பகல்பார்க்க இயலாமல் அடர்ந்த சோலைப்

பசுங்கிளிகள் தமிழ்பயிலும், குருவிக் கூட்டம் மிகவார்க்கும்; மரந்தோறும் தாவித் தாவி

மேவனதாம் செய்தொழுகும் மந்திக் கூட்டம். S

வளம்பலவும் நிறைந்திருக்கும்; வருவோர்க் கெல்லாம்

வறுமையினைத் தொலைத்திருக்கும்; பகைமை பூண்டு களம்புகுதும் வேந்தர் தமக் கரிதாய் நிற்கும்,

கவிஞர்க்கும் விறலியர்க்கும் எளிதாய்த் தோன்றும்; உளங்கவரும் பாவல்ல கபிலன் போன்ற

ஒப்பரிய புலவர்தமைக் கொண்டிருக்கும்; துளங்கரிய பறம்புமலை, பாரி வாழ்ந்த

தொன்னாளில் புகழ்மணக்க ஓங்கி நிற்கும். 4.

பல்வளமும் நிறைந்திருந்து நலமே செய்த

பறம்புதனைக் கொடுங்குன்றம் என்ற தேனோ? சொல்வளமும் பொருள்வளமும் நிறைந்த பாடல்

சொலும்புலவர் பலர்வளைத்து நின்ற தாலோ? மல்வளமும் வில்வளமும் கொண்ட வேந்தர்

மனம்புழுங்கிப் படைவளைத்து நின்றதாலோ? கொல்பகையால் அணுகவொணாக் கடுமை கண்டோ

கொடுங்குன்றம் என்றதனை அழைத்தார் முன்னோர். 5

மேவன - விரும்பியன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_முழக்கம்.pdf/52&oldid=571658" இலிருந்து மீள்விக்கப்பட்டது