பக்கம்:தமிழ் முழக்கம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 0 தமிழ் முழக்கம் 9

பாரிக்கே உரியதெனும் பறம்பு வெற்பைப்

பாடுங்காற் கபிலனெனும் உணர்வு, நெஞ்சில் பூரித்தே நின்றிருக்கக் காணுகின்றேன்;

புலமையினாற் பாடுவதைக் கேட்டு வந்து வாரித்தான் ஈவதற்குப் பாரி யில்லை;

வள்ளலவன் இன்றிருப்பின் நாங்கள் இன்ப வாரிக்குள் திளைத்திருப்போம் வறுமை என்னும்

வன்பகையைத் தொலைத்திருப்போம் வாழ்வுங் காண்போம்.6

வாடுகின்ற முல்லைக்குத் தேர்கொடுத்த

வள்ளன்மைக் குணமுடையோன், வாழ்வு வேண்டிப் பாடுகின்ற எம்மவரைக் காவா திங்கே

பார்த்திருத்தல் செய்வானோ? வானில் ஒன்றாய்க் கூடுகின்ற முகிலுக்கும் வண்மை சொல்லிக்

கொடுத்திருந்த பாரியின்றன் புகழை நெஞ்சாற் பாடுகின்ற பாடலுக்குப் பொருள்சி றக்கும்

பாவலர்தம் வாழ்வுக்கும் வழிபிறக்கும். 7

பாவலர்க்கும் மற்றவர்க்கும் நெஞ்சு வந்து

பாரிவள்ளல் தனக்குரிய முந்நூறுரும் நாவலர்கள் புகழ்ந்துரைக்கக் கொடுத்துயர்ந்தான்

நல்லவன்பேர் வாழியவே! தமிழனங்கின் சேவடிக்கே தொண்டுசெயும் அடிகள் என்னைச்

சீராட்டிப் பொன்னாடை சூட்டி வாழ்த்திப் பாவுலகக் கவியரசென் றொருபேர் தந்தார்

பரிவுளத்தை வணங்குகின்றேன் வாழ்க நன்றே. 8 റ് (பறம்புமலையில் 30.4.66 -இல் நடைபெற்ற பாரிவிழாவில்

தவத்திரு குன்றக்குடி அடிகள்ார். 'கவியரசு' என்ற விருது - - - வழங்கப் பாடியது.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_முழக்கம்.pdf/53&oldid=571659" இலிருந்து மீள்விக்கப்பட்டது