பக்கம்:தமிழ் முழக்கம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

0 கவியரசர் முடியரசன் 0 57

றையன்தொல் காப்பியன் ஆக்கிப் படைத்தளித்தான்; சொன்னவகை எட்டனுள்ளும் தொன்மை ஒருவனப்பாம்: அன்னவனப் பொன்றுக் கணிகலனாக் கொண்டிங்குச் சேரன் சிலம்பினையுஞ் சேர்த்து மொழிகவெனக் கூறிய நச்சருரை யாரும் உணர்வார்கள்:

நீதிநூல்

ஆராய்ந்து பாராமல் அல்லல் செயுமரசு சீரோய்ந்து போயொழியச் செய்யும் உயரறமே: சொற்காத்துத் தற்காத்துச் சோர்வின்றி நன்னெறியால் இற்காக்குங் கற்புடைய ஏந்திழையைப் பார்போற்றும்; 50 சூழ்மதியால் மற்றொன்று சூழினும் முந்துருத் தூழ்வினைதான் வந்தே உறுபயனை ஊட்டிவிடும்: இம்மூன்று நீதி எடுத்துணர்த்தத் தோன்றியநூல் அம்மா பெருந்துறவி ஆக்கும் ஒருநூலே,

நாட்டியல் நூல் கூத்தும் இசையுங் குறிக்கும் இயல்பனைத்தும் பாத்துப் பகர்ந்தணிசேர் பாவில் அரங்கேற்றும்; அன்பின் விளைந்த அகப்பொருளின் நற்றுறைகள் இன்பில் அமைந்தங் கிடையிடையே கொஞ்சிவரும்: அஞ்சலிலாப் போர்முறைக் காகும் புறத்துறைகள் எஞ்சலிலா தெங்கும் எழிலுடனே ஆர்ப்பரிக்கும்; 60 நாட்டுவளஞ் சொல்லி நகரின் நலமுரைத்துக் காட்டும் பொழுதுநகர்க் கண்ணுறையும் பல்வேறு மக்களெலாம் வாழும் வகைமுழுதுஞ் சித்திரித்துத் தக்கவணம் பாடிக் குடியிருப்புத் தந்திருக்கும்: ஒன்பான் மணிபற்றி ஒதும் இயல்புக்குத் தன்பால் இடந்தந்து சாயா ஒளிநல்கும்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_முழக்கம்.pdf/56&oldid=571662" இலிருந்து மீள்விக்கப்பட்டது