பக்கம்:தமிழ் முழக்கம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 * தமிழ் முழக்கம் 9

குன்றினிடைச் சேர்பொருள்கள் கூடிக் குவிந்திருக்கும் முன்றில்தனை அங்கே முழுமைபெறக் காட்டிநிற்கும்; அஞ்சு நிலவகைகள், அங்கே நிகழ்திருநாள், கொஞ்சும் இசை, கூத்துக் கோலமுடன் கூறிவரும்: 70 தன்னினத்தைப் புன்மொழியால் தாக்கி யிகழ்மொழிகள் சொன்னவர்மேற் போர்தொடுத்துச் சூடும் பெருவாகை: இவ்வண்ணந் தென்னாட் டியல்புமதன் பண்பாடும் செவ்வண்ணங் கூறுஞ் சிலம்பென்னும் நன்னூலே,

பெயர்க்காரணம் செம்பொற் சிலம்பால் சிறந்து விளங்குவதால் நம்புஞ் சிலப்பதி காரப்பேர் நண்ணுமென்றே செந்தமிழ்க்கோர் ஆரமெனச் செப்புந் திருநூற்கு வந்தபெயர்க் காரணத்தை வல்லார் நவின்றிடுவர். கோப்பெருந் தேவி, குளிர்முத்தை உள்ளிட்டு யாப்பமைத்துக் காலில் அணிந்த சிலம்பொன்றாம்: 8O கண்ணகி நல்லாள்தன் காலில் அணிந்திருந்த பண்ணுறுநல் மாணிக்கப் பரல்பொற் சிலம்பொன்றாம்: எந்தச் சிலம்பால் எழிற்பெயரைப் பெற்றதென வந்ததோர் ஐயம் வளர்ந்து வளர்ந்துவரச் சிந்தை கலங்கித் தெளிவின்றி நானிருந்தேன்; முந்தை மொழிப்புலவன் முன்னேற்றப் பாவேந்தன் எந்தைக்குத் தந்தைஎனும் என்பாட்டன் பாரதிதான் தந்தஒரு பாடல் தரும்விளக்கம் கண்டுணர்ந்தேன். தேருஞ் சிலப்பதி காரமென்றோர்மணி ஆரம் படைத்ததமிழ் நாடென் றடிபடைத்தர்ன் 90 அந்த மணிமொழியால் அன்னை மணிச்சிலம்பே தந்தபெயர் ஈதென்று சிந்தை தெளிந்திருந்தேன்;

மணி -மாணிக்கம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_முழக்கம்.pdf/57&oldid=571663" இலிருந்து மீள்விக்கப்பட்டது