பக்கம்:தமிழ் முழக்கம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* கவியரசர் முடியரசன் 0 79

ஓங்குபுகழ் இவ்வளவுங் கொண்டிருந்தும்

ஒரிரண்டு குறைகளையும் பெற்ற துண்டு; தீங்குடைய கீழ்மக்கள் தாம்பிறந்த

தேயத்தைக் கேடுறவே செய்வதைப்போல் நீங்கரிய காட்டகமாந் தாயகத்தை

நெருப்பதனால் கேடுறுத்தும் மரமும் உண்டு: மூங்கிலெனும் அம்மரந்தான் மோதி மோதி

முன்பிறந்த வீட்டுக்கே கொள்ளி வைக்கும். 9

அரம்போலுங்கூர்மைமிகும் அறிவரேனும்

அயலவர்தம் துயர்க்கிரங்காச் சிலரைப் போல மரஞ்சூழும் காட்டகத்தே அருகில் நிற்கும்

மரமொன்று வாடுகிற பொழுது கண்டும் இரங்காமல் நிற்கின்ற குணமும் உண்டாம்.

ஈடில்லாச் செல்வவளம் பெற்றிருந்தும் உறங்காமல் காத்திருக்குங் கஞ்சன் போல

ஒருகனியும் உதவாத எட்டியுண்டு. 10

தோன்றிவரும் நாள்தொட்டு மடியுங் காறும்

துணைசெய்யும் மடிந்தபினும் பயனே நல்கும்; ஊன்றிவளர் வேர்முதலாத் தன்பாலுள்ள

உறுப்பெல்லாங்கொடுத்துதவும்; உயிரும் ஈயும்: மான்திரியுங் காட்டகத்தும் மாந்தர் வாழும்

நாட்டகத்தும் மதில்சூழும் வீட்டகத்தும் வான்தடவித் தலைவிரித்து நிமிர்ந்து நிற்கும்:

வாழ்வெல்லாம் பிறருக்கே ஆக்கி நிற்கும். 11

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_முழக்கம்.pdf/78&oldid=571684" இலிருந்து மீள்விக்கப்பட்டது