பக்கம்:தமிழ் முழக்கம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* கவியரசர் முடியரசன் 0 85

காசுபணம் தந்துகலைப் பட்டம் வாங்கும்

காளையரை அந்நாட்டில் எங்குங் காணேன்; ஆசிரியச் செய்கின்ற கடமை பூண்டும்

அன்பளிப்புத் தொகையாகப் பொருள்கள் பெற்று, மாசுபடத் தேர்வெழுதி வந்த பேர்க்கும்

மதிப்பெண்கள் வழங்குகிற கயமை இல்லை; ஆசிரியர் மாணவர்க்குள் பகையும் இல்லை

அப்பன்மகன் என மதிக்கும் உறவே கண்டேன். 9

பயிலவரும் மாணவர்கள் தெளிந்து தேரப்

பயிற்றுமொழி எந்தமொழி என்று கேட்கும் மயலறிவும் சொற்போரும் அங்கே இல்லை;

மதியுடையார் செந்தமிழே மொழியக் கேட்டேன்; வயிறுவளர்ப் பொன்றனையே குறியாக் கொண்டு வழங்குகிற கல்வியினை அங்குக் காணேன்; உயரறிவு வளர்ச்சிக்கே உதவுங் கல்வி

உணர்த்துகிற மேன்மைதனை அங்குக் கண்டேன். 10

கந்தனுக்கே நிகராய இளைஞர் எல்லாம்

கலைபலவுந் தெரிகின்ற கழகங் கண்டேன்; சந்தனத்து நகில்மடவார் சதங்கை கட்டிச்

சதிதவறாதாடிவரும் அரங்கங் கண்டேன்; பந்தடித்துப் பயில்கலையும் மற்று முள்ள

பன்னரிய நுண்கலையும் தேர்ந்து வல்லோர் வந்திருக்கும் இடம்பலவுங் கண்டு கண்டு

வளர்கலைகள் மிகுநாட்டை வாழ்த்தி நின்றேன். 11

மயலறிவு- மயக்கத்தை உடைய அறிவு. நகில் - கொங்கை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_முழக்கம்.pdf/84&oldid=571690" இலிருந்து மீள்விக்கப்பட்டது