பக்கம்:தமிழ் முழக்கம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 9 தமிழ் முழக்கம் 9

குழலிசையும் யாழிசையும் எழுப்பும் ஓசை

குயிலிசையை வண்டிசையை விஞ்சி நிற்கும்; முழவுவகைத் தோற்கருவி தனித்தும் சேர்ந்தும்

முழங்குகிற பேரொலிகள் இடியை விஞ்சும்: பழகுமவர் மிடற்றெழுந்த பாடல் தந்த

பண்ணெல்லாம் தெளிதேனை விஞ்சி நிற்கும்; அழகொழுகும் இடைமடவார் அரங்கம் ஏறி

ஆடுகின்ற எழில்கண்டு மயில்கள் சோரும். 12

கலையுடுத்துக் குழலிசைக்கத் தாளங் காத்துக்

கைவழியே விழிசெலுத்தும் நடனங் கண்டேன்; கலைவிடுத்துக் குழல்விரித்து மானம் விட்டுக்

காசொன்றே குறியென்று பிறந்த மேனி நிலைபடைத்துச் சூடுண்ட மண்புழுப்போல்

நெளிந்துகுதித் தாடுகின்ற பேய்கள் இல்லை; நிலைகெடுத்த கலைகெடுத்த பரணிப் பேய்கள்

நெளிவினுக்குக் கலையின்பேர் சூட்ட வில்லை. 13

பண்ணுடனே திறமனைத்தும் உணர்ந்த வல்லோர்

பாட்டரங்கில் தமிழிசையே முழங்கக் கேட்டேன்; கண்ணறவக் களிப்பினிலும் பாணர் தம்வாய்

கன்னிமொழித் தமிழிசையே பாடக் கேட்டேன்; எண்ணமெனக் கெங்கெங்கோ ஒடி ஒடி

எனதுதமிழ் நாட்டுநிலை நினைந்த தங்கே: நண்ணிஎனைத் தோள்தொட்டுக் கம்ப நாடன்

நலமிக்க வேளாண்மை காண்க என்றான். 14

H. h ." - கணனறவம - களநறவம

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_முழக்கம்.pdf/85&oldid=571691" இலிருந்து மீள்விக்கப்பட்டது