பக்கம்:தமிழ் மொழியின் வரலாறு.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

due to mistakes in metrical dictionaries; the impossibility of correcting them ; the relation between grammar and literature.

VII. பாஷை வேறுபடுமாறு.

பேச்சுவழக்குள்ள பாஷைகள் சதா வேறுபடுமென்பது; ‘இயற்கைப்பிரிநிலை’ பாஷைநூலிலுங் கொள்ளப்படுதல்; சொல் லுருவஞ் சிதைதல், பொச்சாப்பு, சோம்பல், காலச்சுருக்கம், முயற்சிச்சுருக்கம் முதலிய காரணங்கள்; மரூஉ, உச்சரிப்புநலம் முதலிய காரணங்கள்; மொழியிறுதிப்போலி; போலியொப்புமை, அழகு விருப்பம் முதலிய காரணங்கள்: இலக்கணப்போலி; இடக்கரடக்கல்; மங்கலம்; இராஜ்ய மாறுபாட்டுக் காரணம்: இந்துஸ்தானிச் சொற்கள் இலக்கியங்கள் லேறினமை; சக்தியக்கரங்கள்; நெட்டுயிர்களின் நிலைப்பேற்றுக்குறைவு; வாணிகக் காரணம்; ரகர றகரவேறுபாடு; ழகரளகரவேறுபாடு; வீரசோழியமுங் கந்தபுராணமும்; ழகர ளகரங் களை ஒருவகைப்படுத்திச் செய்கைசெய்தல்; பாஷைநிலைகள்; தமிழ் தொடர்நிலையினின்று உருபுநிலைக்கேகும் நிலையிருத்தல்; வேறுபாட்டின் விரைவு; ஏட்டுவழக்கும் பேச்சுவழக்கும் வேறுபடுதல்; பொதுப்படை நியமம்; சிறப்புப்படை நியமம்; பொருள் முற்றிலும் வேறுபடுதல்; உயர்பொருட்பேறு; இழிபொருட்பேறு; குறிப்புச்சொற்கள்; குழுஉக்குறி; அணிவகையான் வேறுபடுதல்; இலக்கணத்தினியக்கம்; நிகண்டு செய்பிழை இலக்கிய மேறுதல்; அவற்றைத் திருத்தலாகாமை; இலக்கியவிலக்கண வியைபு.




VIII.
THE RANGE OF THE LITERATURE.

Civilisation enriches literature; the dignity of language: periods of literature; Early period : before 103 A. D.; mediaeval period : I. A. D. 100 to A. D. 800. II. A. D. 800 to A. D. 1400; modern period; 1400 A. D. upwards; a bird's eye view of the literature of the three periods.

VIII. நூற்பரப்பு.

பாஷையின் நூற்பரப்பு நாகரிகவிருத்திக்குத் தக்கபடி வேறுபடுமென்பது; பாஷையின் கெளரவும்; காலப்பிரிவு;ஆதி காலம்-கி. பி. 100க்கு முற்பட்ட காலம்; இடைக்கால முற்பகுதி-கி. பி. 100 முதற் கி. பி. 600 வரையிலுள்ள காலம். இடைக்காலப் பிற்பகுதி-கி. பி. 600 முதற் கி. பி. 1400 வரையிலுள்ள காலம் ; பிற்காலம்-கி. பி. 1400 முதல் இற்றைநாள் வரையிலள்ள காலம்; இம்முக்காலத்து நூல்களின் இயல்பு.




IX
THE REFORM OF LANGUAGE.

The slow adaptation of language to the growth of civilization; the indispensability of reform ; perspecuity of style, limitation of sandhi; the adoption of punctuation; the Introduction of foreign words.