பக்கம்:தமிழ் மொழியின் வரலாறு.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பகுதி]

தமிழ்மொழியின் வரலாறு

217

சொல்லுந் தெளிவாகவுஞ் சுருக்கமாகவும் அழகாகவுங் கூறுகின்றது. ‘நேமி நாதம்’ என்றதும் அப்படியே.

இனிப் ‘பாட்டியல்’ என்னுமோ ரிலக்கணப் பகுதியுளது. அதனியல்பு சற்றே விரித்துரைக்கற் பாலது. அது தமிழிற் கூறப்படும் தொண்ணூற்றறு வகைப் பிரபந்தங்களி னிலக்கணங்களும், பாடுவோனுக்கும் பாடப்படுவோனுக்கு முள்ள எழுத்துப் பொருத்தம் மங்கலப்பொருத்தம், முதலியனவும், நச்செழுத்து அமுதவெழுத்தென்ற பாகுபாடும், ஆனந்தம் முதலிய குற்றங்களும் இவைபோல்வன பிறவும் விரித்துக் கூறுவதாகும். ‘வெண்பாப்பாட்டியல்’, ‘வரையறுத்தபாட்டியல்’ என்ற நூல்களெல்லாம் பாட்டியல் கூறுவனவே. இலக்கண விளக்கத்தி னிறுதியிற் ‘பாட்டியல்’ என்றதோரியலும் யாத்துக் கோக்கப்பட்டுளது.

அணிகளுட் சொல்லணிகளே விசேடமாய் நல்லிசைப் புலவர்களான் மதிக்கப்படுவனவல்ல. முற்காலத்துச் சங்கச் செய்யுட்களிலெல்லாம் சொல் லணிகள் காண்டலரிது. இச்சொல்லணிகளினும் சித்திரகவிகள் மிகவும் மொதுக் கப்படுவனவாயின. ‘காஞ்சிப் புராண’ மாதிய சில நூல்களே யிவற்றுட் சில கொண்டியங்குகின்றன. மடக்குகளெல்லாம் விசேடமாய் நூல்களிற் பயின்று வராமல் அவற்றுள் ஆங்காங்கு வரும். இடைக்காலத்துத் தோன்றிய சிலர் சொல்லின்பம் நாடுபவராய்ச் சொல்லணிகளைப் பெரிதும் வழங்குவாராயினர். இவர்கள் யமகம், திரிபு முதலிய செய்யுட்கள் பல வியற்றினர். பின்னர்த் திரிபந்தாதிகளும் யமக வந்தாதிகளும் சிலேடை வெண்பாக்களும் அளவிறந்தன வெழும்பின. இவையனைத்தும் பெரும்பாலும் பொருட்செறிவாலவாய் வீண் சப்தஜாலங்களாய்மட்டில் முடிந்தன. இக்காலத்திலும் தென்னாட்டிற் புலவர் பலர் யமகந்திரிபு பாடுதலையே பெரிதாகவெண்ணிவாணாளை வீணாள் கழிப்பர்,

சொன்னலத்தினும் பொருணலமே சிறந்ததெனப் பேரறிவாளர் யாவரும் கூறுவர். யமகந்திரிபுள்ள பாடல்களை ‘உயிரில்லாப் பாட்டுக்கள்’ என்றும், கருத்துநலம் வாய்ந்த கற்பனையுள்ள பாடல்களை ‘உயிருள்ள பாட்டுக்கள்’ என்றும் அறிவுடையோர் பலர் கூறக் கேட்டிருக்கின்றனர். இஃதுண்மையே யென்பது திண்ணம். இவ்வாறவர்கள் கூறுதற்குற்ற காரணங்கள் யாவென்று ஆராய்வோம். முதலாவது: மிறைக்கவிகள் பாடுமிடத்து மிக்க காலஞ் செல்லும்; அப்படிக் காலஞ் சென்றும் சிற்சில வேளைகளில் அவைகள் பாடுவோரிஷ்டப்படி யமையாமற் போவதுமுண்டு. இவ்வாறு முற்கிமோதி முனைந்தடித்து மிழைக் கவிகளைச் சொல்லளவால் ஒருவாறமைத்து முடித்த பின்னரும் அவை சிறந்திருப்பதில்லை. ஏனென்றால் அவற்றின்கட் பொருணலமில்லை. இரண்டாவது: கவிகளியற்றுவது யாவர்க்கும் பயன்படல் வேண்டுமென்பது கருதி, அக்கவிகளிலும் சில, திரிசொற்களா லமைந்து விட்டாற் படிப்பவருட் பலர் திகைப்பர், இவ்வாறிருக்கச் செய்யப்படுங் கவிகளோ மிறைக்கவிகள்? அம்