பக்கம்:தமிழ் மொழியின் வரலாறு.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

236

வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய

[முதற்

மிகுவனவாயினவென்று அமைவு கூறித் தமக்குள்ளே மகிழ்வாரு முளர் அன்னார்மகிழ்ச்சியும், உற்று நோக்குமிடத்து, ஓராற்றா னேற்புடைத்தேயாம்.

இனித் தமிழ் நெடுங்கணக்கின்கண் இன்னொரு விசேஷ முளது. அது குற்றுகர முற்றுகரப் பாகுபாடாம். குற்றுகரமாவது குறுகிய ஓசையுடையது; அரை மாத்திரை யளவிற்று. முற்றுகரமோ குறுகாது ஒருமாத்திரையுடையதாவது. நன்னூலார் குற்றுகரத்திற்குக் கூறிய விதியும், குற்றுகரப் புணர்ச்சிக்குக் கூறிய விதிகளும் மிகச் சிறப்புடையனவாம். தனித் தமிழ்ச் சொற்களுள் உகரவீற்றன வெல்லாம், இக்காலத்திலுள்ள தமிழ்மக்களாற் குற்றுகரவீற்றுச் சொற்களாகவே யுச்சரிக்கப்பட்டு வருகின்றன. முற்றுகரமென்றதோர் பாகுபாடு அத்துணை வேண்டுவதன்று. தமிழர்கள் முற்று கரத்தையுங் குற்றுகரமாகவே யுச்சரிக்கின்றனர். தமிழ்மக்கள் தமிழ்ச்சொற்களாகிய ‘கதவு’, ‘பசு’, முதலிய முற்றுகரமொழிகளை உச்சரிக்கு மாற்றையும், வடசொற்களாகிய ‘இந்து’, ‘சம்பு’ முதலிய குற்றுகர மொழிகளை உச்சரிக்கு மாற்றையும் உற்றுநோக்குக. நோக்கின் முற்றுகரங்கள் குற்றுகரங்களாகவும் குற்றுகரங்கள் முற்றுகரங்களாகவும் உச்சரிக்கப்படுகின்றன வென்பது புலனாம். இதுகண்டு இவ்வுகரப் பாகுபாடு தமிழ்ச் சொற்களுக்கேயன்றி வடசொற்களுக் கில்லை யென்று கொள்வாராயினர் பலரும். தெலுங்கிற் குற்றுகர மின்மையைக் கவனிக்குமிடத்து அது தமிழினின்று பிரிந்தபின்னரே தமிழின் கண் இக்குற்றுகர வுச்சாரணம் புகுந்திருத்தல் வேண்டுமென்பது துணியப்படும். இவ்வுகரப் பாகுபாட்டின் இன்றியமையாமை தமிழ்ச் சொற்கள் புணருமிடத்து வெளிப்படும்.

இசை நலமும் ஓதை நலமுஞ் சான்ற பாஷைகள் விசேஷமாக உயிர் வருக்கத்தில் நன்கு வேறுபட்ட ஒலிகள் சிலவே யுடையனவாமெனவும், உயிர் வருக்கத்தில் விசேஷமாக மிக்க ஒலிகளுள்ள பாஷைகள் இசைகலம் வேறுபட்டுத் தெளிவின்றி ஏகரீதியின் இயங்குவனவாமெனவும் பாஷைநூல் வல்ல பண்டிதர் கூறுகின்றனர். இவரது கூற்றை யொட்டித் தமிழ்ப் பாஷையை ஆராயுமிடத்துத் தமிழ் முதற்கட்கூறிய பாஷைகளின் வருக்கத்திற் சேருமேயன்றிப் பின்னர்க் கூறிய வருக்கத்திற் சேராது.

தமிழ் உச்சாரண பேதங்கள் மூன்றாம். அவைதாம் எடுத்தல், படுத்தல், நலிதல் என்பனவாம். தமிழ்ச்சொற்களை யுச்சரிக்கும்போது பொருள் சிறந்து நிற்கும் பாகத்தி னெழுத்துக்களை யெடுத்தும், அயலெழுத்தைப் படுத்தும், மற்றையவற்றை நலிந்தும் உச்சரிக்க வென்பதே முறை. தமிழர்களது உச்சாரண முறை நாளுக்குயாள் சிறிது சிறிதாக வேறுபட்டுக்கொண்டே வருகின்றது. இவ்வாறு தமிழுச்சாரணம் வேறுபட்டுக்கொண்டே செல்லுமானால் தமிழெழு த்துக்களின் பிறப்பிடங்களும் வேறுபடுதல் வேண்டுவது இன்றியமையாத தாகும். ஆனாற் பாஷைகளினொலிகளினும், அவற்றின் பிறப்பிடங்