பக்கம்:தமிழ் மொழியின் வரலாறு.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பகுதி]

தமிழ்மொழியின் வரலாறு

225

கும் இருநூற்றுப் பதினா றெழுத்துக்களுமாம். ஆங்கிலம் முதலிய பிறபாஷைகளிற் போலாது தமிழில் உயிரெழுத்துக்களின் வைப்பு முறையும், மெய்யெழுத்துக்களின் வைப்பு முறையும் ஆகிய இவ்விரண்டும் மிக நேர்த்தியான ஒழுங்குடையனவாய், ஓசை நூன்முறை அணுவளவும் பிறழாமல் ஏற்பட்டிருக்கின்ற தன்மை யாவரும் வியக்கத்தக்கதே. தமிழ்மொழியிற் கூட்டெழுத்துக்களே யில்லை. கூட்டொலி யுண்டெனினும் வரிவடிவின் அவை தனித்தனி யெழுத்துக்களா லெழுதப் படுவனவாம். தமிழில் எல்லா வெழுத்துக்களும் மொழிக்கு முதலிலே வாரா; பற்பலவரும். எல்லாவெழுத்துக்களும் மொழிக்கிறுதியிலும் வாரா; பற்பலவரும். இனி மொழிக் கிடையிலே எல்லா வெழுத்துக்களும் ஒன்றி யுடனியங்கா. பற்பல தம்மு ளொத்தியங்குவனவாகும். நன்னூலார் இவை யனைத்தையுந் தெளிவுபெற எழுத்தியலில் கூறியிருத்தல் காண்க.

தமிழெழுத்துக்கள் முப்பத்தொன்றே யாகத், தமிழொலிகள் அவற்றினும் மிகுகின்றன. மெல்லெழுத்துக்களுக்குப் பின்னே யடுத்து வருகின்ற வல்லெழுத்துக்க ளெல்லாம் தம் வல்லோசை யிழந்து தாமும் மெல்லோசை யுடையனவாகின்றன. உதாரணமாக, ‘அங்கு’, ‘பஞ்சு’, ‘வண்டு’, ‘வந்தாள்’, ‘பம்பி’, ‘அன்று’ என்ற சொற்களை யுச்சரித்துக் காண்க. மெல்லெழுத்துக்களை மகளிராகவும் வல்லெழுத்துக்களை ஆடவராகவுங்கொண்டு, இல்லற வாழ்க்கையுற்ற ஆடவர் இளகிய சிந்தையராதல் போல, மெல்லெழுத்துக்களை யடுத்துவரும் வல்லெழுத்துக்களும் இளகி மென்மைத்தன்மை மேவினவென்று உவமை கூறுதலு மேற்புடைத்தாம். எனவே வல்லெழுத்தாலும் தம்மோசை யாறும் பிறவோசை யாறுமுடையனவாம். ‘உகுதல்’, ‘பசித்தான்’, ‘படர்ந்தது’, ‘பதிவு’, ‘செய்பவன்’ என்ற சொற்களில் முறையே க, ச, ட, த, பக்கள் தம் மோதையின் வேறுபட்டுப்போயின. இவ்வைந்து சொற்களில் மூன்றாவதிலும் நான்காவதிலுமுள்ள ட, த வோசைகள் முற்கூறிய மெல்லோசைகளேயாக, எஞ்சிய மூன்று சொற்களிலுமுள்ள க, ச, ப வோசைகள் வேறு புத்தொலிகளாமாறு உச்சரித்தறிக. எனவே முன்னர்க் கூறிய ஆறு ஓசைகளோடு இந்த மூன்று புதிய வோசைகளையுங் கூட்டவெழும் ஒன்ப தோசைகளும் தமிழெழுத்துக்களின் மிக்க தமிழோசைகள். ஒவ்வோரெலிக்கும் ஒவ்வோ ரெழுத்திருத்தலே நியமம். அவ்வாறன்றி ஓரெழுத்தால் இரண்டு மூன் றொலிகளைக் குறித்தல் நேரிதன்று. அது பாஷையின் குறைவே. தமிழின்கண் நாற்பதொலிகளிருப்பவும், அவற்றை வரிவடிவிற் குறித்தற்கு முப்பதோ ரெழுத்துக்களேயுள. முப்பத்தோ ரெழுத்துக்களுக்கும் முப்பதேதோரொலிகள் போக மிகுதியான ஒன்பதொலிகளுக்கும் ஒன்பது தனிவே றெழுத்துக்களின்மை தமிழ்ப் பாஷைக்குக் குறைவாமாறு காண்க. ஆதியில் தமிழ் மொழியில் முப்பானோ ரொலிகளேயிருந்தன. வரவர நாளாவட்டத்தில் மக்களது உச்சாரண பேதத்தில் ஒன்பானொலிகள்