பக்கம்:தமிழ் மொழியின் வரலாறு.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

224

வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய

[முதற்

ரென்றும், அங்ஙனம் இதிலிருந்த தொல்லோர் வழங்கியது தமிழ்ப் பாஷையா மென்றும், பலகாரணங்கள் காட்டி விளக்கி நிறுவினார் மேற்புல் விஞ்ஞானிகள்ளொருவர். இது கேட்பதற்கு இனிதாகவும் விநோதமாகவு மிருக்கின்றது. இதனானே யாம் மேலெடுத்துக் காட்டிய தமிழ்நூற் பகுதிகளிற்கண்ட விஷயங்களெல்லாம் வலியுறுமாறு காண்க.

பாஷையின் தோற்றமும் தொன்மையும் முற்றிற்று.
 

 
VI. பாஷையின் சிறப்பியல்பு.
 

 

வ்வுலகின்கணுள்ள பாஷைகளுள் எவையேனும் இரண்டு பாஷைகளாயினும் தம்முள் முற்றும் ஒத்திருப்பதில்லை. வழிமொழிகளும் தாய் மொழியினின்று வேறுபடுகின்றன். சொல்லமைப்பும் கருத்தின் பரப்பும் இலக்கணவமைதியும் பாஷை தோறும் வேறுபடுகின்றன. பல பாஷைகளிற் பயின்று அவற்றின்கண் ஒருமைப்பாடு காணப் புகுவார்க்குப் பாஷைகளின் சிறப்பியல்புகள் பெரும்பாலுந் தோன்றுவதில்லை; அகஸ்மாத்தாய் ஏற்பட்ட இரண்டோ ரொற்றுமைப் பண்புகள் அவர்களுடைய கண்களை மறைக்கின்றன. அதுபற்றி அவர்கள் மயங்குகின்றனர்.

தமிழும் மலையாளமும் தாய் மொழியும் வழிமொழியுமா யொற்றுமைப் பட்டனவே யாயினும், ‘செய்யும்’ என்னும் வினைமுற்றைத் தமிழ்ப் படர்க்கையிற் பண்பாலொழிந்த மற்றை நான்கு பாலினும் வழங்குவதாக, மலையாளமோ அதனை இருதிணை யைம்பான் மூவிடத்திலும் வழங்கா நின்றது. இஃதுணர்ந்த வீரமாமுனிவர் தமிழின்கண் மலையாள வழக்கத்தைக் கொணர்ந்து புகுத்துவார் தமது ‘தேம்பாவணி’ யென்ற நூலின்கண் மேற்கொண்டு செய்யுட் செய்துளர். இன்னும் மலையாளம் திணைபாலுணர்த்தும் வினைவிகுதிகளை யொழித்து விட்டதாகத் தமிழ் அவையனைத்தையும் ஒழித்து விடாது போற்றிக் கொண்டுளது.

இவ்வாறு மிகநெருங்கிய மொழிகளே வேறுபடும்போது மற்றையவற்றின் வேறுபாட்டினைக் குறித்து எடுத்துச் சொல்லவேண்டியதில்லை. பிறப்பு முறையானும் வரலாற்று முறையானும் ஏற்பட்டமொழிப் பாகுபாடுகளில் நிகழக்கூடிய பிழைகளைப் போக்குவதற்குப் பாஷைகளின் அமைப்புமுறை யொருபெருங்கருவி யாகுமாறு அறிக.

இனித் தமிழின் நெடுங்கணக்கு மிகவும் விநோதமானது; பன்னீருயிரும் பதினெண் மெய்யும் ஓராய்தமுமாக முப்பத்தோ ரெழுத்துகளுடையது. இவையே தமிழின் முதலெழுத்துக்களாம்; இவற்றுள்: ‘ற, ழ, ன’ என்ற மூன்றெழுத்துக்களும் தமிழ்ப் பாஷையின் சிறப்பெழுத்துக்களாம். தமிழின் வழிமொழிகளல்லாத பிறபாஷைகளின் கண்ணே இவ்வெழுத் தொலிகளில்லை. உயிர்மெய்யெழுத்துக்கள், பன்னீருயிரும் பதினெண்மெய்யும் உறழப் பிறக்