பக்கம்:தமிழ் மொழியின் வரலாறு.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பகுதி]

தமிழ்மொழியின் வரலாறு

223

என்றதோர் சிறு நூலினாற் சில விஷயங்கள் விளங்குகின்றன. மேல் அடி யார்க்கு நல்லாருரையான் விளங்கிய ஏழ்தெங்கநாடு முதலிய நாடுகளைச் சார்ந்து ‘பெருவள நாடு’ முதலிய பிறநாடுகளும், ‘மணிமலை’ முதலிய சிலமலைகளும், ‘முத்தூர்’ முதலிய சிலவூர்களும், சக்கரக்கோ, பேராற்று நெடுந்துறையன், இடைக்கழிச் செங்கோடன் முதலிய புலவர் சிலரது பெயர்களும், ‘பெரு நூல்’, ‘இயனூல்’ எனச் சில நூற்பெயரும் அந்நூலானும் அதனுரையானும் வெளியாகின்றன. அந்நூல் முதலூழியில் தலைச்சங்கத்தார் காலத்திற் குமரியாற்றிற்கும் பஃறுளியாற்றிற்கும் இடையேயுள்ள பெருவள நாட்டரசனாகிய செங்கோவை முதலூழித் தனியூர்ச் சேந்தன் பாடினானென்பது,

“செங்கோன் றரைச்செலவைச் சேந்தன் றனியூரான்
துங்கன் றமிழ்ந்தாப் புலித்தொடரா -லங்கிசைத்தான்
சக்கரக்கோ முன்னின்று சாற்றும் பெருவூழி
யக்கரக்கோ நாமஞ்சு வாம்”

என்ற பஃறுளியாற்றுத் தலைப்பாய்ச்சல் ஏழ்தெங்க நாட்டு முத்தூர் அகத்தியன் கூறிய பாட்டினாற் புலனாகின்றது.

இவையனைத்தும் உற்று நோக்குமிடத்து, எழுநூற்றுக்காவதம் அகன்றுகிடந்த நாற்பத்தொன்பது தமிழ்நாடுகள் கடல்கொள்ளப்பட்டன வென்பது புலனாம். இக்காலத்து அளவின்படி ஒரு காவதமென்பது பத்து மைலாக, எழுநூறு காவதமும் ஏழாயிரமை லெல்லையளவாம். ‘இந்துமகா சமுத்திரம்’ இருநூற்றைம்பது லக்ஷம் சதுரமைலுள்ளது. இதனால் அது சிறிது குறையப் பதினாறுலக்ஷம் மைல் நீளமும் பதினாறு லக்ஷம் மைல் அகலமுடைய தென்பது பெறப்படும். பெறவே இப்பதினாறு லக்ஷம் மைல் நீளத்தில் ஏழாயிரம் மைலளவு நிலனாயிருந்து கடல் கொள்ளப்பட்டிருத்தல் வேண்டும். இனி, ‘மோரீசத்தீவு’க்கும் ‘பம்பாய்’ நகரத்துக்கும் இடையிலுள்ள நீர்ப்பரவை இரண்டாயிரத்தைந்நூறு மைல் நீளமுள்ளதாம். மோரீசுத்தீவிற்கும் அதற்குத் தெற்கிலுள்ள ‘கெர்கியூலன்’ என்னுந் தீவிற்கும் இடையிலுள்ள நீளமும் அவ்வளவினதேயாம். ஆகவே நீளத்தில் இக்காலத்திலுள்ள குமரிமுனை'யிலிருந்து கெர்கியூலன் தீவின் தெற்கு வரையிலும், அகலத்தில் ‘மடகாசிகர்தீவு’ முதற் ‘சுமாத்திரா’, ‘ஜாவா’ முதலியவற்றை யுள்ளடக்கிய ‘சந்தாத்தீவுகள்’ அளவும் விரிந்துகிடந்த குமரிநாடு கடல் கொள்ளப்பட்ட தென்பது போதரும்.

இக்குமரி நாடுதான், கிழக்கே சந்தாத்தீவுகள் வரையினும், மேற்கே மடகாசிகர் தீவு வரையினும் அகன்று கிடந்ததாகக் கூறப்படும் ‘இலெமுரியா’ என்ற நிலப்பரப்பாம். இந்நிலப்பரப்பு ஒரு காலத்தெழுந்த பெருவெள்ளத்தில் ஆழ்ந்து போயிற்றென்றும் அவ்வாறு ஆழந்துபோன பெருநிலம் இவ்வுலக முழுவதற்கும் நடுவிற்கிடந்த பெரும்பரப்பாகலான் மக்கள் முதன்முதல் இந்நிலத்திலிருந்து பின் நாற்றிசையினும் பிரிந்து சென்று வேறுபட்டன