பக்கம்:தமிழ் மொழியின் வரலாறு.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

228

வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய

[முதற்

“நாலுரை போதகா சிரியர் மூவரும்
முக்குண வசத்தான் முறைமறைந் தறைவரே”

என்ற கூற்றிற்கு இலக்கியமாய்ப் பொது வியலின் தொடக்கத்தே,

“இருதிணை யாண்பெண ளொன்றனை யொழிக்கும்
பெயரும் வினையுங் குறிப்பி னானே”

என்ற சூத்திரத்தில் அஃறிணைக் கண்ணும் ஆண்பெண் பாகுபாடுண்மை கூறி விட்டனர். என் செய்வார்? அவரால் அதனை அறவே யொதுக்க முடியவில்லை.

தமிழில் வினைச்சொற்களுட் சில, பகுதி யொற்றிரட்டியும்; பல, இடை நிலைகளானும்; வேறுசில, விகுதிகளாலும் காலங்காட்டுகின்றன. இறப்பு, நிகழ்வு, எதிர்வு எனக் காலங்கள் மூன்றாக வழங்குகின்றன வெனினும், ஆதி காலத்தில் நிகழ்காலமென்றதொன்று ஏற்படவேயில்லை. ஒரு நிமிஷம் முந்தினால் இறந்தகாலமும் ஒரு நிமிஷம் பிந்தினால் எதிர்காலமுமாய்ப் போதலின் நிகழ்காலத்திற்கு இயக்கமின்றி யொழிதல் காண்க. இதுபற்றியன்றே தொல்காப்பியனாரும் நிகழ்காலத்திற் கெனத் தனிவேறிடை நிலைகள் கூறாது சென்றனர். பாஷையோ நாடோறும் முதிர்ந்து முக்காலமும் அவற்றிற் சில பாகுபாடுகளும் வேண்டி நிற்பதாயிற்று. இது கண்ட நன்னூலார், பாஷை நடையை முற்றிலும் உற்றுநோக்காது ஒருபுடைநோக்கமாய் ‘ஆநின்று, கின்று, கிறு’ என்று மூன்று நிகழ்கால விடைநிலைகள் வகுத்து, அவ்வளவில் அமைவாராயினார். தமிழ்ப் பாஷையின் போக்கோ, பின்வருமாறு காலப் பாகுபாடுகள் வேண்டா நின்றது:-

I. இறந்தகாலம் i இறப்பிலிறப்பு; (உ-ம்) செய்திருந்தான்.
ii இறப்பில்நிகழ்வு; (உ-ம்) செய்திருக்கிறான்.
iii இறப்பிலெதிர்வு; (உ-ம்) செய்திருப்பான்.
II. நிகழ்காலம் i நிகழ்விலிறப்பு; (உ-ம்) செய்யாநின்றான்.
ii நிகழ்வில்நிகழ்வு; (உ-ம்) செய்யாநிற்கிறான்.
iii நிகழ்விலெதிர்வு; (உ-ம்) செய்யாநிற்பான்.
III. எதிர்காலம்: ஒன்றே; (உ-ம்) செய்வான்

இப் பாகுபாட்டினாற் பெருநலம் வினைதலின் இலக்கண நூலுடையார் இதனைக் கடிதின் மேற்கொள்வாரென்பது திண்ணம்.

ஒவ்வொரு பாஷையிலும், அஃதுடையார் முன்பின் பயின்றறியாத பொருள்களுக்குங் கருத்துக்களுக்கும் உற்ற தகுசொற்கள் நாடுதல் நேரிதன்றாம். யாவருக்குந் தெரிந்திருக்க வேண்டிய கருத்துக்களிலுமே சிற்சில வேறுபாடுகள் உண்டாகுமானால் மற்றைய விஷயங்களைக் குறித்துப் பேசவும் வேண்டுமோ? பாஷையியல்பு இவ்வாறாயிருக்கத் தமிழின்கண்ணே இதற்குத் தக்க சொல்லில்லை; அதற்குத் தக்க சொல்லில்லை யென்று பலவாறாக வீண்மொழி பிதற்றி வாய்ப்பறை யறைவதனால் யாது பயன்? ஒரு சொல்லுக் கொரே சொல்லாய்த்தா னிருத்தல் வேண்டுமென்பது என்ன நியாயமோ? ஒரு சொற் பொருளைப், பல சொற்களாற் கூறின் அது குற்றமாதலெப்படி? ‘சுருங்கச்